இணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் சேவையினை வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் 7 வங்கி கார்டுகளைத் தவிரப் பிற வங்கி கார்டுகளைப் பணம் செலுத்த அனுமதிக்காது என்று இரண்டு நாட்களாகச் செய்திகள் வெளியாகி வந்தது.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஐஆர்சிடிசி நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசி வெளியிட்ட முழு அறிக்கையின் விவரங்களை இங்குப் பார்ப்போம்.
ரயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டணம் செலுத்த எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்று அறிவித்தது. மேலும் விசா மற்றும் மஸ்டர் கார்டு பாயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி நிறுவனமும் இதனை உறுதி செய்யும் படி அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களும் டிக்கெட் புக் செய்ய முடியும் என்று பணம் செலுத்துவதற்கான பேமெண்ட் கேட்வே மற்றும் தான் 7 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கார்டுகளும் பயன்படுத்துவது எப்படி?
எனவே ஏதேனும் ஒரு வங்கியின் கேட்வேயினைப் பயன்படுத்தி அனைத்து வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரயில் டெக்கெட் புக் செய்யலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.
பயன்பாட்டுக் கட்டண சர்ச்சை
இது மட்டும் இல்லாமல் ஐஆர்சிடிசி நிறுவனம் வங்கிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தில் பங்கு கேட்கவில்லை என்றும் அதனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள 7 கேட்வேக்கள்
ஐஆர்சிடிசி நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேடிஎம், பேயூ மற்றும் ஐடிஜி கேஷ் கேட்வேக்கள் மூலமாக அனைத்து வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கின்றது
வெளிநாட்டுக் கார்டுகள்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற வெளிநாட்டு டெபிட்/கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி M/s Atom என்ற பேமெண்ட் கேட்வே மூலமாகப் பணத்தினைச் செலுத்தி டிக்கெட் பெற முடியும்.
பரிவர்த்தனை கட்டணங்கள்
தற்போது வங்கிகள் 1,000 ரூபாய் வரை டெபிட்/கிரெட்ட் கார்டு பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் போது 0.25 சதவீதமும், இதுவே 1001 முதல் 2000 ரூபாய் வரை என்றால் 0.5 சதவீதமும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதமும் ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பேரில் வசூலிக்கின்றன.
பரிவர்த்தனைகள் அளவு
ஐஆர்சிடிசி இணையதளத்தில் அதிகபட்சமாக 66 சதவீதம் வரை 1,000 ரூபாய்க்குள் தான் பரிவர்த்தனை நடைபெறுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications