5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஹெச்பி நிறுவனம் முடிவு.. சோகத்தில் ஊழியர்கள்..!

உலகின் முன்னணி வன்பொருள் பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமான ஹெச்பி (Hewlett Packard Enterprise), 10 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்க செய்யப்பட உள்ளதாக முடிவு செய்துள்ளதை ரகசியமாக வைத்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவில், அதுவும் கூடிய விரைவில் எடுக்க உள்ளதாகம் தகவல் கிடைத்துள்ளது.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கை

2017ஆம் ஆண்டு முடிவிற்குள் ஹெச்பி நிறுவனம், 10 சதவீதம் ஊழியர்கள், அதாவது 5,000 ஊழியர்களை முழுமையாக நிறுவனத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் இந்நிறுவனத்தின் அலுவலகங்களில் இருக்கும் 50,000 ஊழியர்களிலேயே இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதில் இந்திய அலுவலகமும் அடக்கம்.

 

உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

பொதுவாக நிறுவனங்கள் ஆரம்பகட்ட ஊழியர்களை மட்டுமே அதிகளவில் பணிநீக்கம் செய்யும் நிலையில் ஹெச்பி நிறுவனம் மேனேஜர் அளவில் இருக்கும் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

மாற்றம்..

மாற்றம்..

ஹெச்பி நிறுவனம் தற்போது அமேசான், ஆல்பபெட் நிறுவனங்களைப் போல் முழுமையாகக் கிளவுட் சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது, இந்த மாற்றத்தில் தேவையில்லாத ஊழியர்களை ஒரு புறமாகவும், மறுபுறம் கட்டண குறைப்பின் காரணமாக 5000 ஊழியர்களைத் தற்போது பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+