இந்தியாவில் அமேசான் துவங்கி புதிய நிறுவனம் பிரான்டிசோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈகாமர்ஸ் சந்தையில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நாட்டின் பெரு நகரங்களை முழுமையாக அடைந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக 2வது மற்றும் 3ஆம் தர நகரங்கள், டவுன்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக 2வது மற்றும் 3ஆம் தர நகரங்கள், டவுன்களில் இருக்கும் மக்களுக்கு வாடிக்கையாளர் சேவையைத் தாய் மொழியிலேயே வழங்க அமேசான் அசோக் பாட்னி குரூப் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.

கூட்டணி நிறுவனம்

கூட்டணி நிறுவனம்

இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் பாட்னி குழுமம் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும், இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் அமேசான் இந்திய தளத்தில் முக்கிய விற்பனையாளராகவும் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

 கிளவுட்டெயில்..

கிளவுட்டெயில்..

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் முதலீட்டு நிறுவனமான கட்டமரான் வென்சர்ஸ் மற்றும் அமேசான் இந்தியா முதலீட்டில் உருவாகக் கிளவுட்டெயில் நிறுவனம் அமேசான் ஈகாமர்ஸ் தளத்தில் முக்கிய விற்பனையாளராக விளங்குகிறது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டில் கூட இந்நிறுவனத்தின் வருவாய் அளவு சுமார் 4 மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒரு விற்பனையாளராகப் பதிவு செய்யவே பிரான்டிசோ நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

 

பிரான்டிசோ

பிரான்டிசோ

பாட்னி குழுமம் மற்றும் அமேசான் இந்தியா கூட்டணியில் உருவான இந்த நிறுவனம் கால் சென்டர்கள் மூலம் வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறது.

இந்நிறுவனத்தின் முழுப்பெயர் பிரான்டிசோ பிஸ்னஸ் சர்வீசஸ்.

 

197 கோடி ரூபாய் முதலீடு

197 கோடி ரூபாய் முதலீடு

அமேசான் ஏசியா பசிபிக் ஹோல்டிங்க்ஸ் மற்றும் பாட்னி சோடியாக் வெல்த் அட்வைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 197 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்டிசோ பிஸ்னஸ் சர்வீசஸ் நிறுவனத்தைப் பெங்களுரில் நிறுவி தனது சேவையை அளிக்கத் துவங்கியுள்ளது.

 வினோத் குமார்

வினோத் குமார்

அமேசான் இந்தியாவில் உயர் மேலாளராக இருந்த வினோத் குமார் தற்போது பிரான்டிசோ பிஸ்னஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாகக் கேப்ஜெமினி நிறுவனத்தின் பிபிஓ வர்த்தகத்தில் பணியாற்றியுள்ளார். 2015ஆம் ஆன்டு கேப்ஜெமினியில் இருந்து வெளியேறி அமேசான் இந்தியாவில் இணைந்தார்.

 

 5 பேர்

5 பேர்

பிரான்டிசோ பிஸ்னஸ் சர்வீசஸ் நிர்வாகக் குழுவில் 5 பேர் இருப்பார்கள் இதில் 3பேர் பாட்னி குழுமத்தை சேர்ந்தவரும், 2 பேர் அமேசான் நிறுவனத்தே சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon established JV with Ashok Patni Group: Frontizo

Amazon established JV with Ashok Patni Group: Frontizo
Story first published: Monday, September 25, 2017, 17:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X