பொதுவாக விழாக்காலத்தில் ஆடைகள் மற்றும் இனிப்புக் கடைகளில் தள்ளுபடி கொடுப்பது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர அனைத்துப் பிரிவுகளிலும் தள்ளுபடியை அளிக்கத் துவங்கிவிட்டனர். தற்போது வீட்டு உபயோக பொருட்கள், வாகன விற்பனை குறிப்பாகக் கார் விற்பனை, ரியல் எஸ்டேட் (நவராத்திரி மற்றும் தீபாவளி ஆஃபராக, இக்காலகட்டத்தில் நீங்கள் வீட்டை புக் செய்தால் வீட்டிற்கான ஜிஎஸ்டி வரி முழுமையாகத் தள்ளுபடியாம்), சில இடங்களில் மதுபானத்தில் ஆஃபர் எனத் தற்போது தள்ளுபடி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது.
இதில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா..?
ஆன்லைன் ஷாப்பிங்
இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான ஈகாமர்ஸ் துறையில் தீபாவளி மற்றும் நவராத்திரி சிறப்புத் தள்ளுபடி விற்பனையாகப் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையை அறிமுகம் செய்து கலக்கி வருகிறது.
தள்ளுபடி
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் அளித்து வரும் ஆஃபர்கள் மக்களைப் பொருட்களை வாங்க ஆர்வமூட்டுகிறது. நீங்கள் தீபாவளி ஷாப்பிங் செய்யும் முன் இந்த நிறுவனம் வர்த்தகத்தில் பெஸ்ட் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா..?
பிளிப்கார்ட் Vs அமேசான் எந்த நிறுவன பெஸ்ட்..?
பொருட்கள் எண்ணிக்கை
ஈகாமர்ஸ் தளத்தில் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கை மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பிரிவில் பல பொருட்களின் மத்தியில் சிறந்த பொருட்களைத் தேர்வு செய்யலாம். ஆக அதிகமான பொருட்கள் இருக்கும் இடத்திலேயே வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கக் கூடும்.
பிளிப்கார்ட்: 8 கோடி
அமேசான் : 16 கோடி
நிதி சேகரிப்பு
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இரண்டு நிறுவனங்களும் நிதியைத் திரட்டி வருகிறது. இப்பிரிவில் பிளிப்கார்ட் ஒரு படி மேல்.
பிளிப்கார்ட் 7 பில்லியன் டாலர்
அமேசான் 5 பில்லியன் டாலர்
விற்பனையாளர்கள்
பொருட்களின் எண்ணிக்கை போலவே விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் வாடிக்கையாளரின் சிறந்த சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
பிளிப்கார்ட்: 1,60,000 விற்பனையாளர்கள்
அமேசான் 2,00,000 விற்பனையாளர்கள்
ஊழியர்கள்
பொதுவாக ஒரு நிறுவனம் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதில் அமேசான் டாப்பு டக்கர்
பிளிப்கார்ட்: 27,000 ஊழியர்கள்
அமேசான்: 50,000 ஊழியர்கள்
சரக்கு கிடங்கு
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் சரக்கு கிடங்கு மிகவும் முக்கியம், காரணம் இப்போது நீங்கள் வசிக்கும் நகரத்திலேயே சரக்கு கிடங்கு இருந்தால் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் ஓரே நாளில் உங்களுக்குக் கிடைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
பிளிப்கார்ட்: 31 சரக்கு கிடங்கு
அமேசான்: 41 சரக்கு கிடங்கு
நிதிநிலைகள்
2015-16ஆம் நிதியாண்டில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய வர்த்தகப் போட்டி நிலவியது. இக்காலகட்டத்தில் இரண்டு நிறுவனங்களும் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது.
பிளிப்கார்ட்: 5,223 கோடி ரூபாய் நஷ்டம், 15,403 கோடி ரூபாய் மொத்த வருவாய்
அமேசான்: 3,572 கோடி ரூபாய் நஷ்டம், 2,275 கோடி ரூபாய் கமிஷன் வருவாய் மட்டும்.
சந்தை பங்கீடு
அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தாலும் பிளிப்கார்ட் சந்தையில் அதிக வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் வைத்துள்ளது.
பிளிப்கார்ட்: 34 சதவீத சந்தை பங்கீடு
அமேசான்: 29 சதவீத சந்தை பங்கீடு
பிளிப்கார்ட் Vs அமேசான்
இன்றைய நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆன்லைன் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதனால் அனைவருக்கும் இதில் நல்ல மற்றும் கசப்பான அனுபவங்களைச் சந்திருப்பீர்கள். இப்போது சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் வர்த்தக நிலையையும் பார்த்துவிட்டோம்.
இப்போ சொல்லுங்க யார் பெஸ்ட்..?
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications