இந்திய பணக்காரர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கும் சீன நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் பணக்காரர்கள் மற்றும் சினிமாகாரர்கள் மீது கவனம் செலுத்தும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதைச் சிலர் எதிர்த்தாலும், உண்மையை நாம் அனைவரும் அறிவோம்.

 

அந்த வகையில் சீனா பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் குறித்து அறிக்கை, மக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது. இந்த அறிக்கையில் இந்திய பணக்காரர்கள் குறித்துப் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஹூரன்

ஹூரன்

சீன பத்திரிக்கை நிறுவனமான ஹூரன் இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வை கடந்த 5 வருடமாகத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், 6வது வருடமாக இந்தியா ரிச் லிஸ்ட் 2017ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

இந்த வருடம் ஹூரன் நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த வருடத்திற்கான ஆய்வில் சேர்த்துள்ளது.

302 பேர்

302 பேர்

எப்போதுமில்லாத வகையில் இந்த வருடம் சுமார் 302 பேர் புதிதாக 2017ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

இப்படியென்றால் கடந்த ஒரு வருடத்தில் 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது என்பது பொருள்.

 

முகேஷ் அம்பானி
 

முகேஷ் அம்பானி

2017ஆம் ஆண்டு வரையில் ஹூரன் வெளியிட்ட அறிக்கையிலும் முகேஷ் அம்பானி முதல் இடத்தை மட்டுமே பெற்றுள்ளார். இந்த வருடம் இவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவீதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2,57,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

617 இந்தியர்கள்

617 இந்தியர்கள்

2016ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் வெறும் 339 பேர் மட்டுமே இருந்த நிலையில் இந்த வருடம் சுமார் 617 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அனைவருமே 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8,400 கோடி ரூபாய்

8,400 கோடி ரூபாய்

2013ஆம் ஆண்டில் சுமார் 100 பேரின் சொத்து மதிப்பு இரண்டுமடங்கு அதிகரித்துத் தற்போது 8,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

படிப்பு

படிப்பு

2017 ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

ஆதிக்கம்..

ஆதிக்கம்..

இந்த வருடம் பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்த பணக்காரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டுப் பட்டியலிவ் பார்மா துறையில் இருந்து 79பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

ஹூரன் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியிலில் 182 பேர் மும்பையில் இருந்தும், 117 பேர் டெல்லியில் இருந்தும், 51 பேர் பெங்களுரில் இருந்து இடம்பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்த 3 நகரங்களுக்கு ஹூரன் நிறுவனம் BIG 3 CITY STATUS என அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 

தெலுங்கான

தெலுங்கான

இந்தியாவில் புதிதாக உருவான தெலுங்கான மாவட்டத்தில் இருந்து சுமார் 38 பேர் 2017 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள்

பெண்கள்

2017ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடுவும் சுமார் 300 சதவீதம் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.

இதில் சுயமாகப் பணக்காரர்கள் ஆனவர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 8ஆக உயர்ந்துள்ளது.

 

அம்பிகா சுப்ரிமணியன்

அம்பிகா சுப்ரிமணியன்

சுயமாகப் பணக்காரர் என்ற நிலையை அடைந்த பெண்களில் பெங்களுரை சேர்ந்த 42 வயதான அம்பிகா சுப்ரிமணியன் இடம்பெற்றுள்ளார். இவர் மூசிக்மா நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்றுவிட்டு டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

சென்னை

சென்னை

சென்னையில் இருந்து இந்த வருடம் புதிதாக 15 பேர் இப்பட்டியலில் இடம்பெற்று டாப் 10 முக்கிய நகரங்கள் பட்டியிலில் சென்னை நுழைந்துள்ளது.

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள்

2017 ஹூரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பத்ம விருதுகள் பெற்ற 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ரீடைல் கிங்

ரீடைல் கிங்

டீமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் இதன் உரிமையாளர் ராதா கிருஷ்ணன் தமனி அவர்களின் சொத்து மதிப்பு 320 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ராதாகிருஷ்ணன் தமனியை ஹூரன் பத்திரிக்கை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் ரீடைல் கிங் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களை மக்கள் பேஸ்புக்கில் அதிகம் பாலோ செய்யப்பட்டுள்ளனர். இப்படி அதிகம் பாலோ செய்யப்பட்ட பணக்காரர்களில் ஆச்சார்யா பாலகிருஷ்ணா முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் பாலகிருஷ்ணாவை சுமார் 56 லட்சம் பேர் பாலோ செய்துள்ளனர்.

 

பலே திட்டம்..!

பலே திட்டம்..!

<strong>இந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..!</strong>இந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..!

 

 

அரசு அதிகாரி!

அரசு அதிகாரி!

<strong>வெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி.. 500 கோடி சொத்துடன் சிக்கிய அரசு அதிகாரி!</strong>வெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி.. 500 கோடி சொத்துடன் சிக்கிய அரசு அதிகாரி!


 

ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

<strong>பதஞ்சலி ஆச்சார்யா வளர்ச்சி பார்த்து ஆடிப்போன முகேஷ் அம்பானி..!</strong>பதஞ்சலி ஆச்சார்யா வளர்ச்சி பார்த்து ஆடிப்போன முகேஷ் அம்பானி..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facts on Hurun India Rich List 2017

Facts on Hurun India Rich List 2017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X