ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகள் மீதான குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான வரம்பைக் குறைத்தது.
மெட்ரோ நகரங்கள் மற்றும் பெறு நகரங்களில் ஒரே அளவிலான குறைந்தபட்ச இருப்புத் தொகையினை அளிக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் குறைப்பு
எனவே இனி மெட்ரோ மற்றும் பிற நகர்ப்புற எள்பிஐ வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை ஒவ்வொரு மாதமும் வைத்து இருந்தால் போதும். இதற்கு முன்பு 5,000 ரூபாயாக இருந்தது.
அனைத்துக் கிளை சேமிப்பு கணக்குகளும்
அனைத்து வங்கி கிளைகளின் சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை மீதான அபராதத்தினை 20 முதல் 50 சதவீதம் வரை குறைத்து உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இதனால் 5 கோடிக்கும் அதிகமான எஸ்பிஐ வங்கி பயனர்கள் பயனடைவார்கள்.
சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்கள்
சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்கில் வைக்காத போது வசூலிக்கப்படும்.
மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள்
இதுவே குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத மெட்ரோ நகர எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள பயனர்களுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
புதிய விதிகள் எப்போது முதல்?
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கியின் இந்த விதிகள் எல்லாம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
ஓய்வூதிய வங்கி கணக்குகள்
ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கு மட்டும் இல்லாமல் ஓய்வூதிய வங்கி கணக்குகள், சமுக நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு கணக்குகளுக்கும் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
எஸ்பிஐ வங்கியில் பின்வரும் சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை:
1) நிதி சேர்த்தல் கணக்குகள்
2) அடிப்படை சேமிப்புக் கணக்குகள்
3) சிறு கணக்குகள்
4) பெஹலா கடம் மற்றும் பெஹ்லி உதான் கணக்குகள்
5) 18 வயதுக்குக் குறைவானவர்களின் வங்கி கணக்குகள்
6) ஓய்வூதிய கணக்கு நிர்வகிப்பவர்கள்
7) சமுக நலத்திட்டத்திற்காகச் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள்
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications