கிங்பிஷர் ஏர்லையனஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடனை வைத்து வர்த்தகத்தை மேம்படுத்தாமல், பணத்தை ஆட்டை போட முன்கூட்டியே முடிவு செய்த விஜய் மல்லையா இந்தியாவில் 20 போலி நிறுவனங்களும், வெளிநாடுகளில் 12 நிறுவனங்களும் உருவாக்கி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.
32 நிறுவனங்களில் இந்தியாவில் இருக்கும் 20 நிறுவனங்களின் பெயரை மட்டும் அமலாக்க துறை வெளியிட்டுள்ளது.
32 நிறுவனங்கள்
விஜய் மல்லையா வாங்கிய கடன் வழக்கு தற்போது அமலாக்க துறை கையில் இருக்கிறது. மல்லையாவிற்கு நேரடியா அல்லது மறைமுகமாக தொடர்புடைய இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களின் பெயரை திங்கட்கிழமை அமலாக்க துறை வெளியிட்டுள்ளது.
மறுப்பு
இதனிடையில் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களின் பெயரை வெளியிட மறுத்த அமலாக்க துறை, இந்த 12 நிறுவனங்கள் பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்ப்பூரில் உள்ளது என தெரிவித்துள்ளது.
6,900 கோடி ரூபாய்
விஜய் மல்லையா ஐடிபிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட 15 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 6,900 கோடி ரூபாய் கடனை மல்லையாவிற்கு நேரடி மற்றும் மறைமுக உரிமை கொண்ட நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணத்தை சலவை செய்துள்ளார் என நம்பப்படுவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள் பட்டியல்
கணபதி மல்லையா பிரைவேட் லிமிடெட்
டெக்கான் லேக்ஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஜெம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டிரேடிங் கோ லிமிடெட்
பாஸ்ட்ஆர்ட் இன்க்
தேவி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்
கிங்பிஷர் பின்வெஸ்ட் லிமிடெட்
ஆம்பிட்யஸ் கம்பூடெக் பிரைவேட் லிமிடெட்
ஏஸ் பின் டெக் சாப்ட்வேர் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்
மெடி கேலக்ஸி பிரைவேட் லிமிடெட்
காம்ஸ்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
பார்மா டிரேடிங் லிமிடெட்
ஹெச் பார்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்
எக்ஸிபிலிசிட் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்
வாட்சன் லிமிடெட்
எஸ்ஈபி கிரேஸ் ஆப்ஸ்டிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
விலோரா கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்
என்டேவர் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்
பிஈ டேட்டா சென்டர் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட்
அடுத்த வழக்கு
இதுவரை மல்லையாவிற்கு தொடர்பான ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்க துறை விசாரித்து வந்த நிலையில், மல்லையா மீதான அடுத்த குற்றச்சாட்டு அறிக்கையில் ஷெல் அல்லது போலி நிறுவனங்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
நிருபணம்
சிபிஐ மற்றும் அமலாக்க துறை, பிரிட்டனில் மல்லையா துவங்கியுள்ள ஹெல் நிறுவனங்களை நிருபணம் செய்தால் இந்த வழக்கிற்கு கூடுதல் வலிமையை சேர்க்கும்.
அடுத்த விசாரனை
ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்க துறை பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4ஆம் தேதி Westminster Magistrates கோர்டில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications