மத்திய அரசு இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது.
இதில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதோடு அவர்கள் மிட்டாய், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது எனப் புதிய வரைவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
செப்டம்பர் 21
மத்திய சுகாதாரத்துறை செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகள் புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா மற்றும் கைனி ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதிகள் வழங்கும் உரிமை நகராட்சி அமைப்புகளிடம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
இதன் மூலம் இந்தியாவில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் கடைகளும் நகராட்சி அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வருவது மட்டும் அல்லாமல் அனைத்துக் கடைகளையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும் எனப் பொருளாதார ஆலோசகரான அருண் ஜா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
இதன் மூலம் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டை அதிகளவில் குறைக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
பிற பொருட்கள்
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு. புகையில் விற்பனை செய்ய அனுமதி பெறும் கடைகள் மிட்டாய்கள், சிப்ஸ், பிஸ்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் கொண்டு வர உள்ளதாக அருண் ஜா தெரிவித்தார்.
இதன் மூலம் புகையிலை பயன்பாட்டுத்தாக மக்களை இக்கடைகளில் இருந்து விலக்கிவைக்க முடியும் என அவர் கூறினார்.
120 கோடி மக்கள்
இந்தியாவில் 5இல் ஒருவர் அதாவது கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அரசு ஆய்வு கூறுகிறது.
மேலும் இந்தியாவில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தும் மக்களின் குறைந்தபட்ச வயது 16ஆக உள்ளது.
மரணம்..
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1 கோடி பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்கள் மூலம் மரணத்தைச் சந்திக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications