இந்திய போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் 4ஜி பியூச்சர் போன் ஒன்ற பாரத் ஒன் என்ற பெயரில் அக்டோபர் மாதம் முதல் 2000 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பாரத் ஒன் போன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பியூச்சர் போன் திட்டத்திற்குப் போட்டியாக வெளிவர இருக்கின்றது.
அசரடிக்கும் ஆஃபர்
குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து அசரடிக்கும் ஆஃபருடன் இலவச குரல் அழைப்புகளுடன் வெளியிட இருப்பதாக இரண்டு நிறுவனங்கள் இடையிலும் தொடர்பில் உள்ள நபர் நமக்குத் தகவல் அளித்துள்ளார்.
விட்ட இடத்தைப் பிடிக்க முடிவு
பண்டிகை காலத்தில் இந்தப் போனை அறிமுகம் செய்யும் எண்ணத்தில் மைக்ரோமெஸ் உள்ளதாகும் மேலும் சீன நிறுவனங்களிடம் இழந்த ஸ்மார்ட்போன் சந்தையினை 4ஜி பியூச்சர் போன் மூலம் பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எதற்கு மைக்ரோமேக்ஸ் 4ஜி போன்
பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதால் ஜியோ போன் அறிமுகத்தால் ஏற்பட இருக்கும் தாக்கத்தினைச் சமாளிக்க முடியும் என்று மைக்ரோமெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்தக் கூட்டுத் திட்டத்தினால் கிராமப்புறங்கள் மற்றும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் எங்கெல்லாம் அதிகப் பியூச்சர் போன் தேவை இருக்கின்றதோ அங்கு எல்லாம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.
பியூச்சர் போன் சந்தை அளவு
பியூச்சர் போனை பொருத்தவரை 500 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான சந்தை உள்ளதாகவும் அதில் ஜியோவுக்கு மாற்றாக மைக்ரோமெஸ் 4ஜி பியூச்சர் போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சரிவில் இருக்கும் நிறுவனம்
இந்தியாவில் போன் தாரிப்பில் இரண்டாம் இடத்தினைப் பிடித்து இருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் 4 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
வணிகத்தைப் பெருக்குவதற்கான திட்டம்
மேலும் பிஎஸ்என்எல் சிம் உடன் இந்த மைக்ரோமெக்ஸ் பியூச்சர் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல் அழைப்புகள் கொடுக்கும் போது அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈர்ப்பது மட்டும் இல்லாமல் மைக்ரோமேஸ் நிறுவனத்தின் வணிகமும் பெருகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications