இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 3 நிறுவனங்களில் கூகுள், பெல், எஸ்பிஐ.. பிற நிறுவனங்கள் நிலை என்ன?

இண்டீட் வேலைவாய்ப்பு இணையதளம் என்று இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற 50 நிறுவனங்கள் என்னென்ன என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தச் சர்வே முடிவினை 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விமர்சனங்களை வைத்துத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே அந்தப் பட்டியலில் இருந்து இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற 10 நிறுவனங்கள் எவை மற்றும் பிற முக்கிய நிறுவனங்களின் நிலை என்ன என்பதை விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

1ல் இடம்

1ல் இடம்

இணையதளத் தேடல் நிறுவனம் உலகளவில் 5 வது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் வேலை செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளதாம்.

2ம் இடம்

2ம் இடம்

பொதுத் துறை நிறுவனமான பெல் எனப்படும் பாரத் எலக்டிரானிக்ஸ் இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற இடங்களில் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.

3வது இடம்

3வது இடம்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்பிஐ மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.

4வது இடம்

4வது இடம்

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 4வது இடத்தினைப் பிடித்துள்ளது.

 5வது இடம்

5வது இடம்

உலகப் புகழ் வாய்ந்த லாட்ஜிங் நிறுவனமான மாரிட்ரெட் இன்டர்நேஷனல் 5வது இடத்தினைப் பிடித்துள்ளது.

டாப் 10-ல் உள்ள மீதி நிறுவனங்கள்

டாப் 10-ல் உள்ள மீதி நிறுவனங்கள்

இண்டெல் 6வது இடம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 7வது இடம், ஐபிஎம் 8வது இடம், டாடா கன்சல்டன்சி 9வது இடம் மற்றும் ஹயத் 10வது இடம்.

டாப் 50 பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நிறுவங்கள்

டாப் 50 பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நிறுவங்கள்

டாடா ஸ்டீல் 17வது இடம், பார்தி ஏர்டெல் 20 வது இடம், அப்பலோ ஹாஸ்பிட்டல் 22 வது இடம், டாடா மோட்டார்ஸ் 33வது இடம், பாரத் எலக்டிரானிக்ஸ் 37வது இடம், ஏசியன் பெயின்ட்ஸ் 45வது இடம், டாடா கம்யூனிகேஷன்ஸ் 46வது இடம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 47வது இடம்.

15 மில்லியன் நிறுவனங்கள்

15 மில்லியன் நிறுவனங்கள்

இண்டீட் உலகளவில் 15 மில்லியன் நிறுவனங்களின் விமர்சனத்தை வைத்து அதிக மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலை இங்கு அளித்துள்ளது.

எதன் அடிப்படையில் இண்டீட் சர்வே உள்ளது?

எதன் அடிப்படையில் இண்டீட் சர்வே உள்ளது?

இந்த விமர்சனங்கள் எல்லாம் வேலை தேடுபவர்களால் அளிக்கப்பட்டவை என்றும் அவர்கள் விரும்பி விண்ணப்பிக்கும் நிறுவனங்களைப் பொருத்து இந்தச் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று இண்டீட் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் சஷி குமார் தெரிவித்தார்.

 

 

ஊழியர்களின் நிலை என்ன?

ஊழியர்களின் நிலை என்ன?

ஊழியர்கள் பொதுவாக வேலைப் பாதுகாப்பு மற்றும் சம்பளத்தை வைத்தே முடிவு செய்வார்கள். ஆனால் இங்கு வலுவான நிறுவனம் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் உணர்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+