பெற்றோர்களே உஷார்.. ஐபோன் மோகத்தால் சிறைக்குச் சென்ற 17 வயது சிறுவன்!

மும்பையில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா 2,000 ரூபாய் நோட்டு கொடுத்து ஐபோன் 7 மாடல் வாங்க முயன்ற 7 வயது சிறுவம் ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் கன்சல்டண்ட் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுச் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

ஐபோன் விளம்பரம்

ஐபோன் விளம்பரம்

சமீர் நாகோத்ரியா என்ற தென் மும்பையைச் சேர்ந்த சைபர் குற்றப்பிரிவு கன்சல்டண்ட் தன்னிடம் இருந்த ஐபோன் 7-ஐ விற்க வேண்டும் என்று இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

வாடிக்கையாளராக வந்த சிறுவன்

வாடிக்கையாளராக வந்த சிறுவன்

அந்த விளம்பரத்தினைப் பார்த்த 17 வயது சிறுவன் இவரைத் தொடர்புகொண்டு தான் அந்தப் போனை வாங்க விருப்பப்படுவதாகவும் கூறியுள்ளான்.

சந்திப்புக்கு முடிவு

சந்திப்புக்கு முடிவு

மேலும் மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் எதிரில் உள்ள மெக்டொனால்டு கடையின் முன்பு சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

வியாபாரம் முடிவு

வியாபாரம் முடிவு

பின்னர் முடிவு செய்ததைப் போன்று சமீரை சந்தித்த அந்தச் சிறுவன் போனை செக் செய்த பிறகு மொத்த பணத்தையும் 2000 ரூபாய் நோட்டுகளாக அளித்துவிட்டுப் போனை எடுத்துக்கொண்டு திரும்பி சென்றுள்ளான்.

ஷாக்கான சமீர்

ஷாக்கான சமீர்

அப்போது அந்த ரூபாய் நோட்டுகளில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்ததைக் கண்டறிந்த சமீர் உடனே அந்தச் சிறுவனைத் துரத்தி பிடித்து அருகில் இருந்த ஆசாத் மைதான் காவல் நிலத்தில் புகார் அளித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீர் திருத்த பள்ளியில் சேர்ப்பு

சீர் திருத்த பள்ளியில் சேர்ப்பு

சிறுவனைக் கைது செய்து அவர்கள் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர்கள் பெற்றோர்களை விசாரிக்கும் போது 17 வயது என்று தெரிந்ததால் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

தானேவில் வாங்கப்பட்ட போலி நோட்டு

தானேவில் வாங்கப்பட்ட போலி நோட்டு

அந்தச் சிறுவனை விசாரித்த போது போன் வாங்கக் காசு இல்லாததால் தானேவில் ஒரு கடையில் இருந்த இந்தப் போலி ரூபாய் நோட்டுகளை வாங்கியது கண்டறியப்பட்டுள்ளது.

 கேரேஜ் பணி செய்து வந்த சிறுவன்

கேரேஜ் பணி செய்து வந்த சிறுவன்

தானேவை அடுத்துள்ள கல்யான் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவன் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் கேரேஜ் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் மூத்த காவல் துறை அதிகாரி கூறினார்.

மோசடி

மோசடி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+