இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான ஐசிஐசிஐ வங்கி வியாழக்கிழமை வீட்டு கடன் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தவனைக் காலம் முடியும் வரை அனைத்து ஈஎம்ஐ-க்கும் 1 சதவீத கேஷ் பேக்கினை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையின் கீழ் வீட்டுக் கடனை குறைந்தபட்சம் 15 முதல் 30 ஆண்டுகள் தவனை முறையில் வாங்க வேண்டும்.
கேஷ்பேக் வைத்துக் கடனை அடைக்கலாம்
வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் ஆஃபரினை கடனை அளிக்கவும் அல்லது வங்கி கணக்கில் திரும்ப வேண்டுமா என்பதைத் தேர்வு செய்ய முடியும்.
எப்போது முதல் கேஷ்பே கிடைக்கும்?
கேஷ்பேக் சலுகை முதல் தவனை முதலே கிடைக்கும். ஆனால் முதன் முறை 36 ஈஎம்ஐ தவனை முறைகளைச் செலுத்திய பிறகு தான் கேஷ்பே கிடைக்கும்.
பின்னர் ஒவ்வொரு 12 ஈஎம்ஐ செலுத்திய பிறகும் தானாக வாடிக்கையாளர்களுக்குக் கேஷ்பே கிடைக்கும். இதனால் கடன் தொகையில் எந்த வரம்பும் கிடையாது.
எவ்வளவு சதவீதம் சேமிப்பு கிடைக்கும்?
எனவே வாடிக்கையாளர்கள் 30 வருடத் தவணையில் கடன் பெறுகின்றார்கள் என்றால் கடன் தொகையில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதனால் இந்தச் சலுகைகள்
வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் கடன் மலிவாகக் கிடைக்கின்றது, எனவே எங்களால் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை அளிக்க முடிகின்றது என்றும் கடன் பெறுவதற்கான சரியான நேரம் இது என்றும் கூறுகின்றனர்.
உதாரணம்
வாடிக்கையாளர்கள் 30 லட்சம் ரூபாயினை 30 ஆண்டுகளுக்குத் தவணையாகக் கடன் பெறுகின்றார்கள் என்றால் 1 சதவீத ஈஎம்ஐ கேஷ்பேக் பெறும் போது 3,24,801 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இதுவே 15 வருடம் 30 லட்சம் கடன் என்றால் 96,349 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும்.
அடைமான கடன் திட்டங்கள்
ஐசிஐசிஐ வங்கியின் இந்தச் சலுகை திட்டம் பிற கடன் திட்டங்களான சொத்துக்கள் மீதான கடன், லீஸ் மற்றும் வாடகை டிஸ்கவுண்ட் மற்றும் டாப் அப் பொன்ற அடைமான கடன்களிலும் பெற முடியும்.
என்ஆர்ஐ
இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டும் இல்லாமல் என்ஆர்ஐ-க்கும் இந்தக் கேஷ் பேக் ஹோம் லோம் சலுகை அளிக்கப்படுகின்றது.
வீட்டு கடன்
ஜூன் மாத காலாண்டில் மட்டும் ஐசிஐசிஐ வங்கியின் கீழ் வீட்டுக் கடன் பெறுவது 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாம். சென்ற காலாண்டில் வங்கியின் ரீடெய்ல் கடனில் 53.6 சதவீதம் வீட்டுக் கடனுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications