ஜப்பான் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவில் பழைய கார்களின் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இப்பிரிவின் வர்த்தகத்தில் தனக்கான இடத்தை விரைவில் பிடித்துக்கொள்ளவே இப்புதிய வர்த்தகத்தில் இறங்கியுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
புதிய தளம்
இந்தியாவில் பல வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான மற்றும் சர்டிபைடு பழைய கார்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களுக்காக நிசான் மோட்டராஸ் இந்தியா நிசான் இண்டெலிஜென்ட் சாய்ஸ் என்ற தளத்தை வடிவமைத்துள்ளது.
எக்ஸ்சேஞ்ச்
இத்தளத்தில் வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் காரை கொடுத்து வேண்டுமானாலும் நிசான் மற்றும் டட்சன் கார்களை வாங்கிக்கொள்ளலாம்.
வாய்ப்பு
இந்தியாவில் பழைய கார்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இத்துறை வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்று நிசான் மோட்டார் இந்தியாவின் விற்பனை, நெட்வொர்க், வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய கார் வர்த்தகத்தின் தலைவரான சடிந்தர் சிங் பஞ்வா தெரிவித்தார்.
வெற்றி தளம்..
நிசான் இண்டெலிஜென்ட் சாய்ஸ் பழையகார்களை விற்பனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இத்தளம் பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வெற்றி அடைந்த ஒன்று.
நகரங்கள்
இத்திட்டம் முதற்கட்டமாக இந்தியாவில் 10 நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ளது. அதில் நொய்டா, மும்பை, அகமதாபாத், லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர், பெங்களூர், சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications