நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜார்கண்ட் மாநிலத்தில் மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயைத் தவறுதலாக ஒரு கட்டுமான நிறுவன கணக்கில் டெப்பாசிட் செய்துள்ளது.
இது முழுக்கமுழுக்க எஸ்பிஐ வங்கி அதிகாரிகளின் தவறுதலால் நிகழ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.
வைப்புக் காலம்
எஸ்பிஐ வங்கி தவறுதலாக வைப்புச் செய்யப்பட்ட பணம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான காலத்திற்குக் கட்டுமான நிறுவன கணக்கிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
70 சதவீத தொகை
இதுநாள் வரையில் எஸ்பிஐ வங்கி இவ்வங்கி கணக்கில் 70 சதவீதம் அளவிலான தொகையைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில், எஞ்சியுள்ள தொகையை அடுத்தச் சில நாட்களில் முழுமையாகப் பெற்றுவிடும் எனத் தெரிவித்துள்ளது.
விசாரணை
இந்தப் பிரச்சனை குறித்து ரான்சி பிராந்தி எஸ்பிஐ வங்கியின் துணை மேலாளர் டி.கே பாண்டா விசாரணை நடத்தியுள்ளார். இந்த முட்டாதனத்திற்குக் காரணமாக வங்கி அதிகாரியை வங்கி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றம் ஹதியா கிளையில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ
கட்டுமான நிறுவன கணக்கில் டெப்பாசிட்ட செய்யப்பட்ட பணம் சில நாட்களிலேயே 7 முதல் 8 கணக்கில் அனுப்பப்பட்டுள்ளது என் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாகப் பாண்டா தெரிவித்தார்.
கல்வி துறை அமைச்சகம்..
மதிய உணவிற்காகக் கல்வி துறை அமைச்சகம் எஸ்பிஐ வங்கிய பணப் பரிமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி அதிகாரிகள் அதனைத் தவறான கணக்கிற்கு வைப்பு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications