மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவித்து வருவதினால் இந்திய வங்கிகளுக்கு 3,800 கோடி ரூபாய் வரை நட்டம் ஆகி இருப்பதாக எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை கூறுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016 நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கி அறிவித்ததை அடுத்து வங்கிகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் வாங்குவது அதிகரித்ததாம்.
பிஓஎஸ் இயந்திரங்கள்
பிஓஎஸ் இயந்திரங்களைப் பயன்படுத்துவது இரண்டு மடங்காக அதிகரித்ததாகவும், மார்ச் 2016 வரை 13.8 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்கள் தான் பயன்பாட்டில் இருந்ததாகவும் இதுவே தற்போது 28.4 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 5,000 பிஓஎஸ் இயந்திரங்கள் வங்கிகளால் நிறுவப்பட்டுள்ளது.
பரிவர்த்தனைகள்
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 51,900 கோடிகளாக இருந்த பிஓஎஸ் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஜூலை 2017-ல் 68,500 கோடியாக உள்ளது. ஆனால் இதுவே 2016 டிசம்பர் மாதம் 89,200 கோடியாக இருந்தது.
நட்டம்
பிற வங்கி பிஓஎஸ் இயந்திரங்களில் டெபிட் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியதால் 4,700 கோடி வரை நட்டம் அடைந்ததாகவும், ஆனால் ஒரே வங்கி பிஓஎஸ் இயந்திரங்களில் பரிவர்த்தனை 900 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.
இதனால் வங்கித் துறைக்கு மொத்தமாக 3,800 கோடிகள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது என்று எஸ்பிஐ வங்கி ஆய்வு கூறுகின்றது.
900 கோடி வருவாய் எப்படி வந்தது?
வங்கிகளுக்கு வணிகர்கள் டிஸ்கவுன்ட் ரேட் மூலமாகவும், மாத வாடகை மூலமாகவும் தான் வருவாய் கிடைத்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் 1 சதவீதமும், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது வெவ்வேறு விகித அடிப்படையிலும் வருவாய் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications