மத்திய அரசு ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு வாங்கிய பொருட்களை விற்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை மாற்றி அறிவித்துள்ளது.
அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம் ஜிஎஸ்டி-க்கு முன்பு கொள்முதல் செய்த பொருட்களை அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையினை மத்திய அரசுக்கு வைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
முந்தைய அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை முதல் அமலுக்கு வந்ததை அடுத்து வாட் எம்ஆர்பி ஸ்டிக்கர் மீது ஜிஎஸ்டி ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் 30 வரை அறிவித்து இருந்தது.
சோதனை
மேலும் இப்படி ஜிஎஸ்டி ஸ்டிக்கர் மாற்றம் செய்யப்படாமல் விற்கப்படும் பொருட்களை அக்டோபர் மாதம் 1 முதல் விற்பனை செய்வது சோதனை அடிப்படையில் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய அறிவிப்பு
இதுவே தற்போது வெளியிட்டுள்ள மத்திய அரசின் அறிவிப்பால் 2017 டிசம்பர் மாதம் 31 வரை தொடர்ந்து ஸ்டிக்கர் மாற்றப்படாமல் விற்க முடியும். எனவே ஜிஎஸ்டி-க்குப் பிறகு விலை குறைந்து அதற்கு முன்பே வாட் வரி செலுத்தி வாங்கி இருக்கும் பொருட்களை இன்னும் மூன்று மாதம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கை வைத்த நிறுவனங்கள்
இதற்கான கோரிக்கையினைச் சிறு வணிகர்கள் சங்கம் மட்டும் இல்லாமல் விப்ரோ, எச்பிஎல் மற்றும் பிற உணவுகள் அல்லாத பொருட்களை விற்பனை செய்யும் பல நிறுவனங்களைக் கோரிக்கையினை வைத்ததாக மூத்த நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் வேலை செய்யும் அதிகாரி தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள்
இதுவே உணவுப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் என்றால் காலாவதி தேதி முடியும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகின்றது.
தேங்கி நிற்கும் பொருட்களின் அளவு
அனைத்து இந்திய வணிகர் சங்கம் 6 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சரக்குகள் ஜிஎஸ்டிக்கு முன்பு கொள்முதல் செய்து இன்னும் விற்பனை செய்யாமல் இருப்பதாகச் செப்டம்பர் மாதம் கூறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications