பணம் ஒன்றும் மரத்தில் காய்ப்பது கிடையாது..!

உங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயது முதல் பணம் பற்றிக் கற்றுத் தாருங்கள். நீங்கள் அவர்களுக்குத் தரும் பாக்கெட் மணியை வைத்து எப்படி அவர்கள் செலவுகளை நிர்வகிப்பது, அதில் இருந்து எப்படிச் சேமிப்பது போன்றவற்றைக் கற்றுத் தாருங்கள்.

மேலும் பள்ளிகளில் எப்படிச் செக்ஸ் கள்வி தேவை என்பது முக்கியம் என்று போராடுகின்றமோ அதே போன்று பர்சனல் ஃபினாஸ் பாடமும் முக்கியம். ஆனால் நமது நாட்டின் பாட திட்டங்களில் இது போன்று திட்டங்கள் ஏதும் இல்லை. எனவே உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டிய பணம் சேமிப்புத் திட்டங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

உங்கள் பிள்ளைகைள் பணத்தைக் கையாள்வதில் குடும்பத்திற்கு உள்ள பொறுப்பு என்ன?

உங்கள் பிள்ளைகைள் பணத்தைக் கையாள்வதில் குடும்பத்திற்கு உள்ள பொறுப்பு என்ன?

பெற்றோர்கள் சரியான முறையில் முதலீடு செய்து வருகின்றார்கள் என்றால் அதன் தாக்கம் அவர்களின் பிள்ளைகளுக்கு வர வாய்ப்புகள் உண்டு. எனவே நீங்கள் முதலீடுகள் போன்ற நிதி சார்ந்த காரியங்களைச் செய்யும் போது உங்கள் பிள்ளைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

பணம் ஒன்றும் மரத்தில் காய்க்காது?

பணம் ஒன்றும் மரத்தில் காய்க்காது?

பொதுவாகப் பணத்தினைச் செலவு செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தினைச் சம்பாதிக்க ஒருவருக்குக் குறிப்பிட்ட சில வழிகள் மட்டுமே உண்டு. எனவே தங்களது செலவுகளை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்று நன்கு சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும். மிச்சப்படுத்தும் பணத்தினைச் சரியாக முதலீடு செய்ய வேண்டும்.

கூட்டுப் பட்ஜெட்

கூட்டுப் பட்ஜெட்

உங்கள் குடும்பத்தின் பட்ஜெட் என்ன எனற் பிள்ளைகளுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகின்றது, எதுவெல்லாம் தேவையான செலவுகள், எதை எல்லாம் செய்யத் தேவையில்லை என்று சொல்லி கொடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆடம்பர செலவுகள் உள்ளது என்றால் அவர்களைப் பகுதி நேர வேலை செய்ய அனுமதியுங்கள்.

நிதி பரிவர்த்தனைகள் பற்றிக் கற்றுக்கொடுங்கள்

நிதி பரிவர்த்தனைகள் பற்றிக் கற்றுக்கொடுங்கள்

மின்னணு பரிவர்த்தனைகளை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொடுங்கள். மேலும் அவற்றை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, மின்னணு வாலெட் சேவையினை எப்படிப் பயன்படுத்துவது, ரொக்க பணம் இல்லாமல் எப்படி நிதியை நிர்வகிப்பது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். அவர்களது கணக்கு விவரங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

நண்பர்களுக்குக் கடன்

நண்பர்களுக்குக் கடன்

தங்களது பிள்ளைகள் சேமிப்புகள் மற்றும் நிதி சார்ந்த செயல்களைச் செய்து வரும் போது அவர்களது நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்குத் தெரிய வரும். அதே நேரம் குழுவாக அவர்கள் இருக்கும் போது எவ்வாறு பங்கிட்டுச் செலவு செய்ய வேண்டும் போன்றவற்றைச் சொல்லித் தாருங்கள். நண்பர்கள் கடன் கேட்கும் போது கண்டிப்பாக இல்லை என்று கூறுவது நல்லது.

சரியான திட்டங்கள்

சரியான திட்டங்கள்

குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்துகொள்ளுங்கள் மற்றும் அவர்களுக்குச் சரியான நேரத்தில் பணம் எடுக்க மற்றும் கொடுக்கக் கற்றுக்கொடுங்கள். கடன் பற்றி நிர்வகிக்கக் கற்றுக்கொடுங்கள், அவசரக் காலங்களில் தேவைப்படும் தொகைக்கு வங்கி கணக்கில் பணத்தினை வைத்துக்கொள்ளக் கற்றுக்கொடுங்கள்.

பாதுகாப்பான வங்கி சேவை

பாதுகாப்பான வங்கி சேவை

பாதுகாப்பாக எப்படி வங்கி சேவையினைப் பயன்படுத்துவது, கிரெடிட் கார்டை எப்படிப் பயன்படுத்துவது, இணையதளப் பரிவர்த்தனைகளை எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது, மோசடிகளைத் தவிர்ப்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள்.

மைனர் டூ மேஜர்

மைனர் டூ மேஜர்

உங்களது பிள்ளைகள் 18 வயதை எட்டிய பிறகு மைனர் சேமிப்புக் கணக்கை மேஜர் கணக்காக மாற்றி அளித்துவிடுங்கள்.

நிதி சுதந்திரத்தை கொடுங்கள்

நிதி சுதந்திரத்தை கொடுங்கள்

அவர்கள் மேஜர் ஆன பிறகு அவர்களது நிதி செயல்பாடுகளில் தலையிடாதீர்கள்.அவர்களது சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள விரும்பாதீர்கள். அவர்களைச் சுதந்திரமாகச் செலவு செய்ய விடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+