டோலிவுட் நடிகரான அல்லு அர்ஜூனின் தம்பி மற்றும் ராதா மோகனின் கெளரவம் படத்தின் ஹீரோவான அல்லு சிரிஷ் சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரேயொரு டிவீட் செய்தார்.
ஒரு டீவிட்டால் ஏர்டெல் நிறுவனம் கதிகலங்கி நிற்கிறது.
அல்லு சிரிஷ்
செப்டம்பர் 18ஆம் தேதி அல்லு சிரிஷ் தனது ஏர்டெல் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை, கால் துண்டிப்பு அதிகமாகவும், இணைப்பு சேவை மட்டமாகவும் இருக்கிறது இதனால் தான் வேறு டெலிகாம் நெட்வொர்கிற்கு மாறத் திட்டமிட்டுள்ள நிலையில் நல்ல நெட்வொர்கை பரிந்துரை செய்யுமாறும் கேட்டு டீவிட் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
இந்நிலையில் மக்களும் அவரது ரசிகர்களும் அதிகளவில் பரிந்துரை செய்தது ஜியோ மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களாக உள்ளதால், இதனையே தான் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அல்லு சிரிஷ் அடுத்த நாள் டீவிட் செய்திருந்தார்.
ஏர்டெல்
19ஆம் தேதி சிரிஷ் செய்த டிவீட்டில் ஜியோ, வோடபோன் நிறுவனங்களைப் பார்த்த உடனேயே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேன்டில்-இல் இருந்து கெஞ்ச துவங்கியது.
எத்தன டிவீட்டு..
அல்லு சிரிஷின் பிரச்சனையைச் சரி செய்து தருவதாகவும், அவருக்கு வேண்டிய உதவியை முழுமையாகவும் உடனடியாகவும் செய்து தர ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து டீவிட் செய்யது.
ஆனால் எதற்கு அல்லு சிரிஷ் பதில் தெரிவிக்கவில்லை.
ஜியோ
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஜியோ நிறுவனம், ஜியோ குடும்பத்தில் உங்களை இணைத்துக்கொள்ள மகிழ்ச்சிக்கொள்கிறோம் என்றும், ஏர்டெல் எண்ணை ஜியோவிற்கு மாற்றுவதற்கான வழிமுறையையும் டிவிட்டர் பதிவில் தெரிவித்தது ஜியோ.
வோடபோன்
ஜியோ நிறுவனத்தைப் போலவே வோடபோன் நிறுவனமும் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி அல்லு சிரிஷை இந்நிறுவனத்தில் சேருமாறு டிவிட்டர் பதிவில் கேட்டுக்கொண்டது.


Click it and Unblock the Notifications