பாலிவுட்டில் மட்டும் அல்லாமல் உலகளவில் வெற்றிபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இந்த 100 நாள் பிரம்மாண்டமான போட்டியில் வெற்றியாளராக ஆர்வ் அறிவிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.
பரிசு மீதான வரி
இந்தியாவில் பரிசு, லாட்டரியில் கிடைக்கும் பணத்திற்கு வரி செலுத்தியே ஆக வேண்டும். இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு பரிசு தொகையின் மீது 30.9 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜிஎஸ்டிக்குப் பின் இது 28 சதவீதமாகக் குறைந்தது.
கிடைத்தது இதுதான்..
தற்போது ஆர்வ்-விற்குக் கிடைத்துள்ள 50 லட்சம் ரூபாயில் 14 லட்சம் ரூபாயாக வரி செலுத்த வேண்டும். ஆக இவருக்கு மொத்தம் 36 லட்சம் ரூபாய் வெறுவார் ஆர்வ்.
பெரிய வீடு
சுமார் 19 பிரபலங்கள் பங்கேற்ற இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் சகல வசதிகளையும் கொண்ட வீட்டை 2-3 கோடி ரூபாய் வரையிலான தொகைக்குக் கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
சம்பளம்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு, பிக் பாஸ் ஹவுஸில் இருந்த நாட்களுக்கு ஏற்ப சம்பளம் கொண்டுக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்துப் பிக் பாஸ் நிறுவனமோ அல்லது விஜய் டிவியோ எவ்விதமான தகவல்களையும் அறிவிக்கவில்லை.
கமல்
பொதுவாக விளம்பரங்களிலும், டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத கமல்ஹாசன், சமீபகாலமாகப் போத்தீஸ் விளம்பரத்தில் வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது உலகப் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications