இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலையைக் கடந்த 3 வருடமாக உயர்த்தாத மத்திய அரசு தற்போது முதல் முறையாக உயர்த்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் இதுநாள் வரை சந்தித்த வருமான சரிவில் இருந்து மிள முடியும்.. ஆனால் உண்மையான பாதிப்பு மக்களுக்குத் தான்.
மத்திய அரசு
3 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு பார்மூலா முறையிலான விலை நிர்ணயத்தைக் கொண்டு இயங்கி வந்த நிலையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் சர்வதேச விலை நிலையை ஒப்பிடுகையில் தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தைக்கு நிகரான அளவிற்கு விலையை உயர்ந்துள்ளது.
விலை மாற்றம்..
இந்தியாவில் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்திற்கு ஒரு யூனிட் இயற்கை ஏரிவாயுவின் விலை 2.48 டாலராகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யக் கடுமையாக இருக்கும் தளத்தில் இருக்கும் ஏரிவாயுவின் விலை 5.56 டாலராக இருந்தது.
பார்மூலா வாயிலான நிர்ணயம்
3 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அமலாக்கம் செய்யப்பட்ட பார்மூலா வாயிலான விலை நிர்ணயம் கைவிடப்பட்டுத் தற்போது சாதாரண எரிவாயுவின் விலையை 16 சதவீதம் உயர்த்தி 2.89 டாலராகவும், கடுமையாக இருக்கும் தளத்தில் உற்பத்தியாகும் ஏரிவாயு விலை 13 சதவீதம் உயர்த்தி 6.30 டாலராகவும் உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த விலைமாற்றத்தின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸ் ஆகிய நிறுவனங்கள் கூடுதலான வருமானத்தைப் பெறும்.
பாதிப்பு
ஆனால் இந்த விலைமாற்றத்தின் மூலம் வீட்டில் உபயோகம் செய்யப்படும் சமையல் எரிவாயும், எரிவாயுவைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
மோடி அரசு..
3 வருடத்திற்கு முன்பு மோடி தலைமையிலான அரசு சர்வதேச சந்தையில் இருக்கும் முக்கியமான எரிவாயு உற்பத்தி செய்யும் சந்தை விலைக்கு ஒப்பான ஒரு விலையை இந்தியாவில் நிர்ணயம் செய்யும் பார்மூலாவை அக்டோபர் 2014இல் அமல்படுத்தியது.
அப்போது இதன் விலை தடாலடியாக 5.05 டாலராக உயர்ந்தது, அதன் பின் சர்வதேச சந்தையில் இதன் விலை குறைந்ததால், இந்தியாவிலும் இதன் விலை குறையத் துவங்கியது.
அதிகாரம்..
இந்நிலையில் கடந்த வருடம் மத்திய அரசு கடுமையான உற்பத்தி தளத்தில் எரிவாயுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அதன் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications