இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதனை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு கண்டிஷன்..
கட்டணம்..
எஸ்பிஐ வங்கியில் இருக்கும் சேமிப்பு கணக்குகளை மூட வேண்டும் என்றால் கணக்கு திறக்கப்பட்ட 14 நாட்கள் தவிர அனைத்து நிலைகளிலும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. இந்த நடைமுறை கடந்த 1 வருடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அபராதம்..
சமீபத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் இருப்பு தொகையை வைக்க வேண்டும் என்றும் இதனை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபாரத தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
இக்காலக்கட்டத்தில் தான் மக்கள் அதிகளவில் கணக்கை மூட திட்டமிட்டனர். அப்போது இந்த 500 ரூபாய் கட்டணம் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து குறிப்பிடத்தக்கது.
மாற்றம்..
சில நாட்களுக்கு முன்பு மக்களின் நிலையை கண்டு குறைந்தபட்சம் இருப்பு தொகையின் அளவை குறைத்த எஸ்பிஐ நிர்வாகம் தற்போது கணக்கை மூடுவதற்குமான கட்டணத்தையும் நீக்கியுள்ளது.
ஒரு கண்டிஷன்
எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ள படி சேமிப்பு கணக்கு திறக்கப்பட்ட 14நாட்கள் முதல் 1 வருடம் காலம் ஆன கணக்குகளை மூடினால் மட்டுமே 500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பிற எந்த காரணத்திற்காகவும் கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என தெவித்துள்ளது.
ஜாலி..
இனி குறைந்தபட்ச இருப்பு அளவின் மூலம் அவதிப்படும் மக்கள் எவ்விதமான தயக்கமுமின்றி எஸ்பிஐ வங்கி கணக்கை மூடிக்கொள்ளலாம்.
மேலும் இந்த புதிய அறிவிப்புகள் அக்டோபர் 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications