நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பங்குகளை வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களும், நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களும் சில முக்கியக் கட்டுப்பாடுகளுடன் பங்குகளை விற்பனை செய்யலாம்.
ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா..?
பிளிப்கார்ட்
கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் முக்கியமான பணியில் அமர்த்தும் போதும், இலக்கை அடையும் போதும் நிறுவனத்தின் பங்குகளை அளிக்கும் வெகுமதியாக அளிக்கும்.
இந்தப் பங்குகளையே தற்போது பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
பங்கு விலை..
பிளிப்கார்ட் நிர்வாகம் அறிவித்துள்ள படி ஒரு பங்கு 85.2 டாலர் விலையில் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதனுடன் பரிமாற்ற கட்டணமாக ஒரு பங்கிற்கு 3-4 டாலர் வரையிலான தொகையைக் கட்டணமாகவும் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள்
ஆதாவது ஊழியர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விற்பனை செய்வதன் மூலம் 5303.9 ரூபாய் (புதன்கிழமை மதிப்பின் படி) பெறுவார்கள்.
ஆனால் ஊழியர்கள் பங்கு விற்பனை செய்வதில் சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம்.
கட்டுப்பாடுகள்
தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருக்கும் பங்கு அளவுகளில் 25 சதவீதம் மட்டுமே விற்பனை செய்ய இந்நிறுவனம் அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு ஊழியர் 100 பங்கு வைத்திருந்தால் அவர் 25 பங்குகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
அதேபோல் நிறுவன பணியை விட்டு வெளியேறியவர்கள் 10 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும் எனக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிளிப்கார்ட்.
4 முறை வாய்ப்பு
பொரும்பாலன நிறுவனங்கள் இத்தகைய வாய்ப்பை அடிக்கடி அளிக்காத நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 5 வருடத்தில் 4 முறை ஊழியர்களுக்குத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்துள்ளது.
அறிவிப்புகள்
திங்கட்கிழமை இரவு பிளிப்கார்ட் நிறுவனங்களின் தலைவரான பின்னி பன்சால் ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு விற்பனை குறித்த மின்னஞ்சலை அனுப்பிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதனைமனிதவள பிரிவு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை அனுப்பியது.
புதிய முதலீடுகள்
ஒரு நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து புழக்கத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்பை அளிக்க முடியும். இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இத்தகைய முயற்சி மிகவும் பெரியதாகப் பார்க்கப்படுகிறது.
6000 ஊழியர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம், பங்குகளை வைத்திருக்கும் சுமார் 6,000 ஊழியர்களின் (முன்னால்மற்றும் இந்நாள் ஊழியர்களைச் சேர்த்து) பங்குகள் விற்பனை வருகிறது.
பிற நிறுவனங்கள்
இதே வாய்ப்புப் பிளிப்கார்ட் குழும நிறுவனங்களான மிந்திரா, போன்பே ஆகிய நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகப் பிளிப்கார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு இதற்காகப் பிளிகார்ட் உயர்மட்ட நிர்வாகக் குழு சுமார் 100 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
சாம்சங் கூறும் புதுக் கணக்கு..!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications