கேலக்ஸி எஸ்8 விட ஐபோன் எக்ஸ் விற்பனையில் தான் அதிக லாபம்.. சாம்சங் கூறும் புதுக் கணக்கு..!

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு, தொழில்நுட்பம், அதற்கான சந்தை நாளுக்குநாள் அதிரடியான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சந்தையில் முடிசூடா மண்ணாக விளங்குவது இரு நிறுவனங்கள் மட்டுமே, அவை சாம்சங் மற்றும் ஆப்பிள்.

இந்த இரு நிறுவனங்கள் மத்தியில் தொழில்நுட்ப ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பல அழுத்தமான போட்டிகள் இருக்கும் நிலையில், தற்போது வெளியான தகவல்கள் மூலம் ஆப்பிள் மீது இருந்த மதிப்பு சற்று சரிந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உடன் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதுடன், ஸ்மார்ட்போனுக்கான உதிரிப் பாகங்களையும் அதிகளவில் தயாரித்துப் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது.

முக்கிய வாடிக்கையாளர்

முக்கிய வாடிக்கையாளர்

சாம்சங் தயாரிக்கும் ஸ்மார்ட்போன் உதிரிப் பாகங்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளராக இருப்பது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றி பிராண்டான ஐபோனில் பல பாகங்கள் சாம்சங் தயாரித்தது தான். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் எக்ஸ் இந்திய சந்தைக்கு இன்னும் சில நாட்களில் வரும் நிலையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

 

ஐபோன் எக்ஸ்

ஐபோன் எக்ஸ்

சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய அறிமுகமான கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனுக்குத் தயாரித்த உதிரி பாகங்களைச் செலவை விடவும் 4 பில்லியன் டாலர் அதிகமான பணத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட உதிரி பாகங்கள் மூலம் பெற்ற உள்ளதாக அமெரிக்காவில் வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாக உள்ள ஐபோன் எக்ஸ்-க்கா பல முக்கியப் பொருட்களைச் சாம்சங் நிறுவனத்திடம் இருந்தே ஆப்பிள் வாங்கியுள்ளது.

 

முக்கியப் பாகங்கள்

முக்கியப் பாகங்கள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக வருவாய் பங்கீட்டை கொண்டு இருப்பது ஐபோன். இதனைத் தயாரிக்க OLED டிஸ்ப்லே, NAND பிளாஷ் மற்றும் DRAM ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் சாம்சங்-யிடம் இருந்தே வாங்குகிறது.

அதிக லாபம்

அதிக லாபம்

இந்நிலையில் ஒவ்வொரு ஐபோன் எக்ஸ் விற்பனைக்கும் சாம்சங் நிறுவனம் சுமார் 110 டாலர் வருமானமாகப் பெறுகிறது.

35 சதவீத வருமானம்

35 சதவீத வருமானம்

சாம்சங் நிறுவனத்தின் உதிரிபாகங்களின் தயாரிப்பு மற்றும் அதன் விற்பனையின் மூலம் மொத்த வருமானத்தில் இருந்து சுமார் 35 சதவீத வருமானத்தைப் பெறுகிறது குறிப்பிடத்தக்கது.

மதிப்பு..

மதிப்பு..

ஆப்பிள் ஐபோன் வாங்கிவைத்திருந்தாலே தான் பிறந்தற்கான காரணத்தை அடைந்துவிட்டதாகக் கருதும் பலருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கும்.

ஆனால் தொழில்நுட்ப உலகில் நம்பர் ஓன் நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனமோ, சாம்சங் நிறுவனத்தை நம்பி தான் தனது முக்கிய வர்த்தகப் பொருளான ஐபோனை தயாரிக்கிறது.

 

கட்டுமானம்..

கட்டுமானம்..

ஆப்பிள் நிறுவனம் உதிரிபாகங்களைச் சாம்சங் மற்றும் இதர பல நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதைப் போல், ஐபோனை கட்டமைப்பதும் பாக்ஸ்கான் போன் தைவான் மற்றும் சீன நிறுவனங்கள் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+