பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாட்டின் பயன்பாட்டில் இருந்து 86 சதவீதம் ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர வேண்டிய பொறுப்பு வங்கிகள் மேல் விழுந்தது.
மக்களும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ரூபாய் நொட்டுகளை மாற்றிச் சென்றனர்.
தேவை மற்றும் ஊழியர்கள்
மக்களுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகம் இருந்தது, போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருந்த காரணங்களால் வங்கி ஊழியர்கள் அதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கூடுதல் பணி நேரம்
சில நேரங்களில் வங்கி ஊழியர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை பார்த்து வந்தனர். மேலும் விடுமுறைகளும் வங்கி ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் பல வங்கி ஊழியர்கள் வேலை பழுவை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்தினால் இறந்தனர்.
மோடியின் வாழ்த்து
இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மோடி அவர்கள் நன்றி என்று நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்பதுடன் முடித்துக்கொண்டார்.
11 மாத காத்திருப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து தற்போது 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு வங்கி கூடக் கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய கூடுதல் சம்பளத்தினை அளிக்கவில்லை.
கூடுதல் சம்பள பாக்கி
பல வங்கி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை வங்கி நிறுவனங்கள் சம்பளம் அளிக்க வேண்டிய பாக்கி உள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு மணி நேரச் சம்பளம் எவ்வளவு
ஊழியர்களின் சம்பளத்தினைப் பொருத்து கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வங்கி நிர்வாகங்கள் சம்பளம் அளிக்கவேண்டும்.
வங்கி ஊழியர்கள் சங்கம்
அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிஎச் வெங்கட்டாசலம் இதுபற்றிக் கூறுகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் இல்லை என்றால் சட்டப்படி பெறுவதற்கான முயற்ச்சிகள் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
வங்கி நிறுவனங்கள்
அதுமட்டும் இல்லாமல் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து இதுவரை ஒரு வங்கி நிறுவனமும் ஊழியர்களுக்குக் கூடுதல் நேரப் பணிக்கான சம்பளத்தினை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் நிலை
பிரதமர் மோடி அவர்கள் எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இது வரை பல எதிர் மறையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது இதுவும் சிக்கல் ஏற்படுத்தி வருகின்றது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து இன்னும் இந்திய மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications