சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி தான்.
மக்கள் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. வரியை குறைத்தாலும் மத்திய அரசு லாபம் அதிகமே..
2.73 லட்சம் கோடி..
சமீபத்தில் குறைக்கப்பட்ட வரியின் மூலம் மத்திய அரசு வெறும் 13,000 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம். ஆயினும் இந்த வருடம் பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்களின் விற்பனையின் மூலம் சுமார் 2.73 லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெறும் என மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி அமைப்பு தெரிவித்துள்ளது.
2.75 மடங்கு..
மோடி தலைமையிலான முதல் ஆட்சி வருடத்தில் ஈட்டிய வருமானத்தை விட இந்த ஆண்டு பெறப்போகும் 2.73 கோடி ரூபாய் வருமானம் சுமார் 2.75 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
13 சதவீதம் வளர்ச்சி
நாட்டின் பொருளாதாரம் தரையை தட்டும் அளவிற்கு வந்த நிலையிலும், வரி வசூல் மீது குறியாக இருக்கும் மத்திய அரசு கடந்த வருடத்தை விடவும் சுமார் 13 சதவீதம் அதிகமான வருமானத்தை இந்த ஆண்டு பெற உள்ளது கவனிக்க வேண்டிய ஓன்றாக உள்ளது.
வரி குறைக்கப்பட வில்லையெனில் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவு 2.86 லட்சம் கோடியை தாண்டியிருக்கும்.
மாநில அரசு
ஆனால் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பும்போதும் மத்திய அரசு, மாநில அரசை கைகாட்டி தப்பித்துக்கொள்கிறது.
அப்ப என்னதான் உண்மை..?
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications