இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு இன்று தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சிறு வணிகர்களுக்கு ஏற்றவாறு பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளன
இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள சில முக்கிய முடிவுகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
வரி தாக்கல்
சிறு குறு வணிகங்கள் தற்போது 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வணிகம் செய்யும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று இருக்கின்றது. அதனை 1.5 கோடியாக உயர்த்தப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஒவ்வொரு காலாண்டாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதில் சிறு குறு வணிகர்களை வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 1 மாதத்தில் இருந்து காலாண்டாக மாற்றுவது மற்றும் 75 லட்சம் ரூபாய் என்ற வரம்பை 1 கோடியாக மட்டும் உயர்த்த வாய்ப்பு உண்டு ஆந்திர நிதி அமைச்சர் ஒய் ராமகிருஷ்ணடு தெரிவித்தார்.
நன்மை
இதனால் சிறு வணிகங்கள் மற்றும் உணவகங்களை மூன்று அடுக்க வரி தாக்கல் முறையில் இருந்து விலக்கு அளித்து 1 முதல் 5 சதவீதம் வரை வரி தாக்கல் செய்வதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளது. மேலும் 60 பொருட்கள் மீது வரி குறையவும் வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டிஆர் 1
ஜிஎஸ்டிஆர் 1 வரித் தாக்கலினை 33 லட்சம் வணிகர்களை இது வரி செய்துள்ளதாகவும் வரி தாக்கல் செய்ய வேண்டிய 20 லட்சம் வணிகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டல் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசித் தேதி
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி அக்டோபர் 10 என்றும், பொருட்களைக் கொள்முதல் செய்ததற்கான விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிஆர் 3
இறுதி ஜிஎஸ்டிஆர்-3, ஜிஎஸ்டிஆர்1 மற்றும் 2-ஐ சரிபார்த்தல் போன்ற விவரங்களைத் தாக்கல் செய்ய நவம்பர் 10 கடைசித் தேதி ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications