இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்து வரும் நட்டம் மற்றும் வாங்கியுள்ள கடன்களால் 1,50,000 நபர்கள் வரை மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை வாய்ப்பினை இழப்பார்கள் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 8 லட்சம் கோடி வரை கடன் வாங்கியுள்ளதாகவும், இதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்க முக்கியக் காரணம் ஜியோ போன்று இலவசங்களை அள்ளி வீசியதே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறை
தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது மத்திய அரசு இது குறித்து விவரங்களை அறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கண்டிப்பாக இந்தத் துறையினைச் சாகடிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
ஆர்பிஐ
சென்ற ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியும் டெலிகாம் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கடன் குறித்து வங்கிகளுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது.
என்ன தீர்வு
டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலால் அவர்களுக்குத் தங்களது செலவுகளைக் குறைப்பதை தவிர வேறு வழியில்லை.
இணைவால் நேர்ந்த நிலை
மேலும் டெலிகாம் நிறுவனங்கள் சில இணைவுகளை அறிவித்து இருப்பதினால் மட்டும் 20,000 முதல் 25,000 ஊழியர்களை வரை நேரடியாக வேலை வாய்ப்பினை இழப்பார்கள்.
ஐடியா
டெலிகாம் துறையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஐடியா மற்றும் வோடாபோன் இணைவை அடுத்து ஐடியா நிறுவனத்தில் இருந்து 1800 நபர்கள் வெளியேற்றியுள்ளதாகவும், இது 5,000 முதல் 6,000 ஊழியர்கள் வரை அதிகரிக்கும் என்றும் தெரிகின்றது.
வோடாபோன்
மறுபக்கம் வோடாபோன் நிறுவனத்தில் இருந்து 1,400 நபர்கள் இதுவரை பணியை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏர்டெல்
அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
சென்ற ஆண்டில் மட்டும் சிஸ்டமா நிறுவனத்துடன் இணைந்ததை அடுத்து 1,200 ஊழியர்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியேற்றியுள்ளது. மேலும் தற்போது ஏர்செல் உடனான இணைவில் இருந்து வெளியேறியுள்ளதால் 800 ஊழியர்களின் வேலைப் பறிபோவது தடுக்கப்பட்டுள்ளது.
1,25,000 ஊழியர்கள் வேலை வாய்ப்பு
எனினும் டெலிகாம் துறையினைப் பொருத்த வரையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,25,000 ஊழியர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உறுதி.
டாப் 5-ல் டெலிகாம்
இந்தியாவில் வேலை வாய்ப்பு அளிப்பதில் டாப் 5 துறைகளில் டெலிகாம் துறையும் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை இருந்து வந்தது. ஆனால் தற்போது தலைகீழாக மாறியுள்ளது பெறும் ஊழியர்களின் மத்தியில் பெறும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
2015-2016 நிதி ஆண்டில் மட்டும் டெலிகாம் துறையில் 20 லட்சம் நபர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொருளாதாரம்
ஊழியர்களின் நிலை மட்டும் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் டெலிகாம் துறை 6.5 சதவீத பங்கை வகித்து வந்தது. ஆனால் அதிலும் பெரிய அளவிற்குத் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications