8 மடங்கு அதிக முதலீடு.. அதிரடியாக களமிறங்கும் ஆனந்த மஹிந்திரா..!

மத்திய அரசின் எலக்ட்ரிக் கார் ஆர்டரில் பாதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இழந்த நிலையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது.

உலக நாடுகளில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு ஆகிய நிறுவனங்கள் அடுத்த சில வருடங்களில் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்களை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் தற்போது ஆனந்த மஹிந்திரா தலைமையிலான, மஹிந்திரா அண்ட் மஹிந்திராவும் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.

 500 கோடி ரூபாய்..

500 கோடி ரூபாய்..

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் தனது எலக்ட்ரிக் கார்களின் வர்த்தகம் மற்றும் தயாரிப்பில் இதுவரை வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் உடனான தோல்வியில், அதிரடியாக அடுத்த 3 முதல் 5 வருடத்தில் 3,500 முதல் 4,000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

உலகம் முழுவதிலும் வர்த்தகம்..

உலகம் முழுவதிலும் வர்த்தகம்..

இந்திய முதலீட்டு மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

கூட்டணி நிறுவனங்கள்

கூட்டணி நிறுவனங்கள்

உலக சந்தைக்கு செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உலக தரம்வாய்ந்த கார்களை சந்தைக்கு அனுப்ப மோட்டார் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கூட்டணி நிறுவனங்களை தேடி வருகிறது.

6 கார்கள்

6 கார்கள்

இந்தியாவில் ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இதுவரை 2 கார்களை மட்டுமே வைத்துள்ள இந்நிறுவனம் அடுத்த சில வருடங்களில் 6க்கும் அதிகமான கார்களை சந்தை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

4 பரிவுகளில் முதலீடு..

4 பரிவுகளில் முதலீடு..

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா செய்ய உள்ள 4000 கோடி ரூபாய் முதலீட்டை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, பேட்டரி டெக்னாலஜி, மோட்டார்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் என 4 பரிவுகளில் முதலீடு செய்ய உள்ளது.

 கார்களின் விலை..

கார்களின் விலை..

இனி வரும் காலத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் கார்கள் 3 விலை அளவுகளில் வெளிவரும் என இந்நிறுவனத்தின் தலைவர் பவன் கோங்கா தெரிவித்துள்ளார். அவை 7-10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய், 25 லட்ச ரூபாயில் மஹிந்திரா சமீபத்தில் கைப்பற்றி பின்னிபாரினா கார்கள் வெளியிடப்பட்ட உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+