தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் இனி ஆதார் கட்டாயம்!

மத்திய அரசு தபால் நிலயங்கள் மூலமாக அளித்துச் சேமிப்புத் திட்டங்களுக்கு இனி பையோமெட்ரிக் சர்பார்ப்பு ஆதார் அடையாளம் முக்கியம் அன்று அறிவித்தது.

எனவே இனி தபால் நிலையங்களில் உள்ள டெபாசிட் திட்டங்கள், பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திர திட்டம், கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் போது ஆதார் எண்ணுடன் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும்.

பழைய முதலீட்டாளர்கள்

பழைய முதலீட்டாளர்கள்

தலாபல் நிலைய சேமிப்புத் திட்டங்களில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2017 டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஆணைகள்

அரசு ஆணைகள்

நிதி அமைச்சகம் இதற்காகத் தனித் தனியாக நான்கு அரசு ஆணை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அரசு ஆணைகளில் தபால் அலுவலக டெபாசிட் கணக்குகள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு பத்திர திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா டெபாசிட் திட்டம் போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29 தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஆதார் எண் இல்லாது அணைத்து தபால் நிலைய டெபாசிட் கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

வங்கி கணக்குகள், மொபைல் போன் மற்றும் பிற நிதி சேவைகளில் கருப்புப் பண நடமாட்டத்தினைக் குறைப்பதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 காலக்கெடு நீட்டிப்பு

காலக்கெடு நீட்டிப்பு

செப்டம்பர் 30-க்குள் அரசு மானியம் வழங்கும் அனைத்து திட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவை சென்ற மாதம் 2017 டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

முக்கியத் திட்டங்களில் ஆதார் இணைப்பு

முக்கியத் திட்டங்களில் ஆதார் இணைப்பு

எல்பிஜி, ஏழைப் பெண்கள் நிதி உதவி திட்டம், மண்ணெண்ணெய், உரம், பொது விநியோக திட்டம் என 35 அமைச்சகங்களின் கீழ் வரும் 135 திட்டங்களுக்கு ஆதார் இணைப்புக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கான திட்டங்களில் ஆதார் இணைப்பு

ஏழைகளுக்கான திட்டங்களில் ஆதார் இணைப்பு

மேலும் தேசிய தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் கூட்டுறவு திட்டங்கள், குழந்தைகள் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மத்திய உணவு இலவச கல்வித் திட்டங்களுக்கு ஆதார் இணைப்புக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+