ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும், சிறு குறு வணிகர்களுக்கும் அளிக்கப்பட்ட விலக்கு என்னென்ன?

ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டுப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதில் முக்கியமான ஒன்று தாமதம் செய்யப்பட்டு வரும் கூடுதலாகச் செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி தொகையினைத் திரும்ப அளிப்பது ஆகும்.

வரித் தொகை எப்போது திரும்பக் கிடைக்கும்?

வரித் தொகை எப்போது திரும்பக் கிடைக்கும்?

ஜூலை மாதத்திற்கான ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டி வரியைச் செலுத்தியுள்ள வணிகர்களுக்கு அக்டோபர் 10ம் தேதிக்குள் செக்குகளாக வரித் தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கான தொகையினை அக்டோபர் 18-ம் தேதிக்குள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலெட் செயலி அறிமுகம்

வாலெட் செயலி அறிமுகம்

மேலும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு வரியைத் திருப்பி அளிப்பதற்கான வாலெட் சேவை ஒன்றை 2018 ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஏற்றுமதி முடக்கம்

ஏற்றுமதி முடக்கம்

ஜிஎஸ்டி வரிப் பிடித்தத்தினைத் திருப்பி அளிக்காததால் வணிகம் செய்வது பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் புகார் அளித்துள்ளனர். மத்திய அரசு 65,000 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரியாகப் பெறப்பட்டுள்ள பணத்தினைத் திரும்ப அளிக்க வேண்டும்.

 ஜிடிபி

ஜிடிபி

நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் 20 சதவீதம் வரை ஏற்றுமதி வணிகங்கள் வைத்துள்ள நிலையில் அரசு பணத்தினைத் திருப்பி அளிக்காமல் இருப்பது ஜிடிபி அளவைப் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன்

ஜிஎஸ்டிக்கு முன்

ஜிஎஸ்டி-க்கு முன்பு இருந்த திட்டங்களின் படி ஏற்றுமதி நோக்கங்களுக்காக உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு வரி செலுத்தவில்லை. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஐஜிஎஸ்டி வரியைச் செலுத்திவிட்டு பின்னர் அதனைத் திரும்பப் பெறும் முறையாக உள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு முதலீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஜூலை மாதம் முதல் வரியாகப் பெற்ற பணத்தினை இன்று வரை திருப்பி அளிக்காததால் ஏற்றுமதி வணிகம் முழுமையாகப் பாதிப்படையும் சூழல் நிலவி வருகின்றது.

காலாண்டு வரி தாக்கல்

காலாண்டு வரி தாக்கல்

எனவே ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்ய வரி முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஒவ்வொரு காலாண்டும் வரி தாக்கல் செய்து பணத்தினைத் திரும்பப்பெறும் திட்டத்திற்கு நேற்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரி விலக்க வரம்பு

வரி விலக்க வரம்பு

மேலும் சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்து 75 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்க வரம்பை 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 1.5 கோடி ரூபாயாக உயர்த்துவார்கள் என்று நிறுவனங்கள் எதிர்பார்த்தன.

வரி தாக்கல்

வரி தாக்கல்

மேலும் சிறு வணிகர்கள் 1.5 கோடிக்கும் குறைவாக வருவாய் உள்ள போது ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போது என்றும் அறிவித்துள்ளார். இதுவே முன்பு ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்தது.

வரவேற்பு

வரவேற்பு

சிறு வணிகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்துள்ளதை வரி வல்லுநர்கள் வர வேற்றுள்ளனர்.

நன்மை

நன்மை

இதனால் சிறு வணிகங்கள் மற்றும் உணவகங்களை மூன்று அடுக்க வரி தாக்கல் முறையில் இருந்து விலக்கு அளித்து 1 முதல் 5 சதவீதம் வரை வரி தாக்கல் செய்வதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளது. மேலும் 60 பொருட்கள் மீது வரி குறையவும் வாய்ப்பு உள்ளது.

ஜிஎஸ்டிஆர் 1

ஜிஎஸ்டிஆர் 1

ஜிஎஸ்டிஆர் 1 வரித் தாக்கலினை 33 லட்சம் வணிகர்களை இது வரி செய்துள்ளதாகவும் வரி தாக்கல் செய்ய வேண்டிய 20 லட்சம் வணிகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டல் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடைசித் தேதி

கடைசித் தேதி

ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி அக்டோபர் 10 என்றும், பொருட்களைக் கொள்முதல் செய்ததற்கான விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிஆர் 3

ஜிஎஸ்டிஆர் 3

இறுதி ஜிஎஸ்டிஆர்-3, ஜிஎஸ்டிஆர்1 மற்றும் 2-ஐ சரிபார்த்தல் போன்ற விவரங்களைத் தாக்கல் செய்ய நவம்பர் 10 கடைசித் தேதி ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+