மும்பை பங்குச்சந்தை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் ஒவ்வொருவாரமும் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல் இந்த வாரமும் இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சுமார் 12,371 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓவை வெளியிட உள்ளது.
1000 கோடி ரூபாய்
இந்த வாரம் பங்குச்சந்தையில் பொது பங்கு வெளியீடும் இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் அக்டோபர் 9-11 வரையிலான காலத்தில் சுமார் 60,65,009 பங்குகளை சுமார் 1,645 -1650 ரூபாய் விலையில் விற்று சுமார் 1,001 கோடி ரூபாயை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
முதல் நிறுவனம்
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்திக்கான சான்றிதழ்களை ஆட்டோமேடெட் முறையில் வர்த்தகம் செய்யும் தளத்தை முதன்முதலீல் உருவாக்கியது இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் தான்.
11,370 கோடி ரூபாய்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா 855 - 912 ரூபாய் விலையில் இந்நிறுவனத்தின் சுமார் 14.22 சதவீத பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.
இந்நிறுவனம் வருகிற அக்டோபர் 11-13ஆம் தேதிக்குள்ள ஐபிஓ வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை முதலீடு
பல்வேறு காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த ஐபிஓக்கள் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். அதேபோல் சந்தையில் புதிதாக முதலீடு செய்வோருக்கும் நிச்சயமான லாபத்தை அளிக்கும் ஒரு பிரிவாக தற்போது ஐபிஓ விளங்குகிறது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications