இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அமெரிக்காவில் இருக்கும் ஷேல் ஆயில் மற்றும் காஸ் பிளாக் தளத்தை 126 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த தொகை கடந்த 7 வருடம் முன்பு ரிலையன்ஸ் வாங்கிய விலையில் 3இல் 1 தொகை மட்டுமே.
மார்செல்லஸ் தளம்
2010ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியா பகுதியில் இருக்கும் மார்செல்லஸ் தளத்தை 392 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
சர்வதேச விலை
ஆனால் தற்போது பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் இத்தளத்தின் மதிப்பு குறைந்துள்ளது.
கூட்டணி நிறுவனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இத்தளத்தை விற்பனை செய்யும் நிலையில், இதனுடன் முதலீடு செய்த காரிசோ ஆயில் அண்ட் காஸ் நிறுவனமும் வெளியேற முடிவு செய்துள்ளது.
சொத்து எண்ணிக்கை
இந்த தளத்தின் விற்பனையின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அமெரிக்கவில் இருக்கும் தளத்தின் எண்ணிக்கை 2ஆக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications