இந்திய மதுபான சந்தையில் பீர்-க்கு தனி ஆதிக்கம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இப்பிரிவு வர்த்தகத்தில் தொடர்ந்து சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பிப்ரவரி 2015ஆம் ஆண்டுத் தனது வெற்றி பாதையைத் துவக்கியது பீரா.
இந்நிலையில் பீரா நிறுவனம் தற்போது தனது 5வது தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 நகரங்களில் மட்டும்..
பீரா 91 பிராண்டின் கீழ் ஏற்கனவே 4 பீர்கள் சந்தையின் வர்த்தகத்தில் இருக்கும் போது, தற்போது The Indian Pale Ale என்ற வகையில் தனியாக ஒரு பீரை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக டெல்லி-என்சிஆர், மும்பை மற்றும் பெங்களூரில் இருக்கும் சுமார் 250 ரெஸ்டாரண்ட்களில் இதனை அறிமுகம் செய்துள்ளது.
அன்கூர் ஜெயின்
பீரா 91 பீரை தயாரிக்கும் பி9 பிரவெரேஜஸ் நிறுவனத்தின் தலைவரான அன்கூர் ஜெயில் கூறுகையில், "இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட(The Indian Pale Ale) இந்தப் பீருக்கு இது அறிமுக விழா, 1800களில் பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியர்களுக்கான இந்தியர்களின் ஸ்டைலில் அறிமுகம் செய்த ஒரேயொரு பீர் தான் இந்த The Indian Pale Ale. ஆனால் காலக்போக்கில் இது அழிந்துவிட்டது."
பிற பிராண்டுகள்
The Indian Pale Ale அறிமுகம் செய்யும் பீரா 91 ஏற்கனவே பிரா 91 வொயிட், பீரா 91 பிளான்டு, பீரா 91 லையிட் மற்றும் பீரா 91 ஸ்ட்ராங் ஆகியவற்றை அறிமுகம் செய்து இந்தியாவில் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகச் சந்தை
இந்தக் காலாண்டுக்குப் பின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட The Indian Pale Ale அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளார் அன்கூர் ஜெயின். இந்தியாவில் இருந்து உலகச் சந்தைக்குப் போகும் முதல் IPA இது.


Click it and Unblock the Notifications