இன்டெல் நிறுவனம் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடந்த 6 மாதத்தில் சுமார் 9,500 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதில் டெவலப்பர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக இன்டெல் இந்தியா தெரிவித்துள்ளது.
இன்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சுமார் 40 கல்லூரிகள் மற்றும் 50 பொது மற்றும் தனியார்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பாக்கிங் மற்றும் நிதியியல் சேவை அகிய துறை சார்ந்த நிறுவனம் இதில் அடக்கம்.

இந்த பயிற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் மென்பொருள் ஆய்வாளர், டேட்டா சையின்டிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் தடையை உடைக்க முடியும் என நம்பிக்கையில் 'Code Modernisation' என்ற பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஏஐ டே என்ற பெயரில் 15,000 பேருக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 6 மாத இடைவேளையில் மீண்டும் ஒரு பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.


Click it and Unblock the Notifications