இந்தியாவின் முதன்மை பங்கு சந்தைக் குறியீடுகளான மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் தீபாவளி சமயத்தில் முகூர்த் டிரேடிங் என்ற முறையினைச் செயல்படுத்தும்.
தீபாவளி என்றால் மக்களுக்கு எப்படிக் கொண்டாட்டமோ அதேப்போன்று இது முதலீட்டாளர்களான தீபாவளி திட்டமாகும். இது தீபாவளியை ஒட்டி வரும் அம்மாவசை அன்று செயல்படும்.
முகூர்த் டிரேடிங்
பொதுவாகத் தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் இந்த முகூர்த் டிரேடிங் சேவை 2017-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ளது.
முழு அட்டவணை
முகூர்த் டிரேடிங் மூலம் முதலீடு செய்வதற்கான முழு அட்டவணையினை இங்குக் கீளிக் செய்து பார்க்கவும்.
ஏன் முகூர்த் டிரேடிங்?
முகூர்த் என்றால் நல்ல நேரம் என்று அர்த்தம். மார்வாடிகளுக்கும் குஜராத்திகளும் எப்போதும் தீபாவளி தான் புதிய வருடத்தின் துவக்கம். அதுமட்டும் இல்லாமல் பங்கு சந்தையில் அதிகம் முதலீடு செய்பவர்களும் அவர்கள் தான். எனவே தீபாவளி நாள் விடுமுறைக்கு அடுத்த நாளான முகூர்த் டிரேடிங் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
இந்த நாட்களில் முதலீடு செய்தால் லாப அதிகம் என்பது முதலீட்டாளர்களின் எண்ணம். அதற்காக இந்த நாட்களில் முதலீடு செய்தாலே லாபம் என்று எல்லாம் இல்லை. சந்தையின் நிலவரத்தினை அறிந்து முதலீடு செய்வது நல்லது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
அன்மை காலங்களாக இந்தியர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முகூர்த் டிரேடிங் நாளில் விரும்பி முதலீடு செய்கின்றனர்.
தொடர்புக்கு
முகூர்த் டிரேடிங் குறித்து மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகளும் சந்தேகமும் இருந்தால் 022-61363100 என்ற மொபைல் எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications