மத்திய அரசு ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி இன்றே என்றும் காலக்கெடுவை இனிமேலும் நீட்டிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜிஎஸ்டி இணையதளம் முடங்கியது மற்றும் முதல் முறையாகத் தாக்கல் செய்வதில் உள்ள பல்வேறு குழப்பங்களால் இரண்டு மாதம் வரை ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
கடைசித் தேதி
எனவே இதுவரை ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத வணிகர்கள் ஜிஎஸ்டிஆர் - படிவத்தினை இன்று அதாவது 10/10/2017 நள்ளிரவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
ஒருவேலை ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்யவில்லை என்றால் இந்த வணிகரிடம் இருந்து பொருட்களை வாங்கியவருக்கு உள்ளிட்டு வரியைக் கணக்கிட்டு ஜிஎஸ்டிஆர்-2ஐ தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்படும்.
பி2பி
எனவே அனைத்து வணிகர்களும் தங்களது ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாகப் பி2பி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஜிஎஸ்டிஆர்-2
ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்த உடன் இவரிடம் இருந்து பொருட்களை வாங்கிய வணிகர்களுக்கான ஜிஎஸ்டிஆர்-2ஏ தானாகவே தயாராகிவிடும். எனவே பொருட்களை வாங்கியவர்கள் ஜிஎஸ்டிஆர்-2இல் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனைத் திருத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications