ஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..!

ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது இப்போது சாதாரனமாகிவிட்டது. அன்மையில் காக்னிசெண்ட் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் இருந்து 400 மூத்த அதிகாரிகளை விருப்பு ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லுமாறு அறிவித்தது.

இந்த அறிவிப்பின் பட்டியலில் இயக்குனர்கள், இணை தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடங்குவார்கள்.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

பிராஞ்ச் ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து 35 மூத்த தலைவர்கள் மற்றும் இணை தலைவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதத்துடன் வெளியேற வெண்டும்.

இன்போசிஸ்

இன்போசிஸ்

மேலும் நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நிலை 6-ல் உள்ள 1,000 இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களை அதுவும் குழு திட்ட மேலாளர்கள், திட்ட மேலாளர்கள், மூத்த கட்டட வல்லுனர்கள் மற்றும் பெரிய நிலையில் உள்ளவர்களைப் பணியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பெரிய ஐடி நிறுவனங்கள்

பெரிய ஐடி நிறுவனங்கள்

மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் மீண்டும் 2008-2010 காலத்தில் செய்ததை விட அதிகளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்தால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களையே தேர்வு செய்கின்றனர்.

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

மூத்த ஊழியர்களை 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பணியில் எடுப்பதாகவும், 0-5 வருட அனுபவம் உள்ள ஊழியர்களுக்குத் தான் 56 தேவை உள்ளதாகவும், 5 முதல் 10 வருட அனுபவம் உள்ள ஊழியர்களை 41 சதவீதம் வரை நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதாகவும்.

மூத்த ஊழியர்களை ஏன் பணிக்கு எடுப்பதில்லை?

மூத்த ஊழியர்களை ஏன் பணிக்கு எடுப்பதில்லை?

மூத்த ஊழியர்களை வெளியில் இருந்து பணிக்கு எடுப்பதற்குப் பதிலாக நிறுவனத்தின் உள்ளிருப்பவர்களில் ஒருவரை எடுக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

மற்றொரு பக்கம் குழுவை நிர்வகிக்கும் பணிகளில் ஆட்டோமேஷன் நுழைந்துள்ளதால் மூத்த நிலை ஊழியர்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றனர்.

செலவுகளைக் குறைப்பது

செலவுகளைக் குறைப்பது

மூத்த ஊழியர்களின் பல பணிகள் ஆட்டோமேஷனின் கீழ் வருவதால் பணி நீக்கம் நடைபெறுகின்றது என்பது மட்டும் இல்லாமல் அதிக ப்ரெஷர்களைப் பணிக்கு எடுத்து அதிகச் சம்பளம் வாங்கும் மூத்த ஊழியர்களை வெளியேற்றி செலவுகளைக் குறைப்பதும் ஐடி நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+