இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 13,000 கோடி மதிப்பிலான பங்குகளை 2017 நவம்பர் 1ம் தேதி திருப்பி வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு கடிதத்தினையும் இன்ஃபோசிஸ் பங்குகளை வைத்துள்ள பைபேக்கிற்குத் தகுதி உள்ள முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல்
பங்குகளைத் திருப்பி வாங்க இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு ஆகஸ்ட் 19ம் தேதி ஒப்புதல் வழங்கியதை அடுத்துத் திங்கட்கிழமை பங்கு தார்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
பங்குகளின் நிலை
13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ள நிர்வாகம் ஒரு பங்கிற்கு 1,150 ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ளது. இன்றைய சந்தை நேர முடிவின் படி இன்ஃபோசிஸ் பங்குகள் 935.6 ரூபாய் என உள்ளது.
இதனால் மொத்தமாக 11.30 கோடி பங்குகள் மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவனம் திருப்பி வாங்கும்.
நிறுவனர்கள் கோரிக்கை
நீண்ட காலமாக இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் பலர் பங்குகளைத் திரும்ப வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
டிசிஎஸ்
இந்த வருடத்திற்கு முன்பு இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வங்க இருப்பதாக அறிவித்தது.
பிற ஐடி நிறுவனங்கள்
மேலும் இதேப்போன்று பிற ஐடி நிறுவனங்களான காக்னிசென்ட், விப்ரோ மற்றும் மைண்ட்டிரீ உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவினை அறிவித்துள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications