பிரஷ்ஷர்களுக்கு புதுவிதமான பயிற்சி.. இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டம் நிறைவேறுமா?

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஐடித்துறை பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தத் திடீர் மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய ஐடி நிறுவனங்கள் என்றால் மிகையாகாது.

இந்த மோசமான நிலைக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றாமல் இருந்ததும், தொடர்ந்து வெளிநாடு அதிலும் முக்கியமான அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருந்ததும் தான் முக்கியக் கரணமாக விளங்குகிறது.

விமான ஓட்டுநர்

விமான ஓட்டுநர்

இந்நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு விமான ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கு இணையான பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளது.

எதற்காக இப்படிப்பட்ட ஒரு பயிற்சி..?

எதற்காக இப்படிப்பட்ட ஒரு பயிற்சி..?

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது இருக்கும் மோசமான சூழ்நிலையில் இருந்து வெளிவர, பிளையிட் ஸ்டிமுலேட்டர்ஸ் மாதிரி வடிவத்தைக் கொண்டு இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.

இந்தப் பயிற்சியின் மூலம் ஊழியர்கள் வேகமாகப் பணியாற்றவும், மேம்பட்ட முறையில் சுயமாகச் சிந்திக்கவும் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யவும் முடியும் என இன்போசிஸ் நம்புகிறது.

 

இப்போது இதன் அவசியம் என்ன..?

இப்போது இதன் அவசியம் என்ன..?

உலகச் சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிக்கவும், பெரிய கார்பரேட் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய இத்தகைய பயிற்சி தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் மிகவும் அவசியம் என உணர்ந்துள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் கூறுகிறது.

தேவை

தேவை

பொதுவாகப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பிராஜெக்டை சில மாதங்களில் முடிக்கக் கோரி வந்த நிலையில், தற்போது சில வாரங்களில் முடிக்க உத்தரவிட்டு வருகிறது. இதனால் ஊழியர்கள் பிராஜெக்ட்டில் வரும் பிரச்சனையை உடனுக்குடனும் வேகமாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

இத்தகைய தேவையை மையமாகக் கொண்டே இந்தப் பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளது இன்போசிஸ்.

 

மைசூர் கேம்பஸ்

மைசூர் கேம்பஸ்

இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வழக்கம் போல் இந்தப் பயிற்சி மைசூரில் இருக்கும் தனது 337 ஏக்கர் பயிற்சி மையத்திலேயே நடத்த உள்ளது.

கூடுதல் பயிற்சி

கூடுதல் பயிற்சி

இந்தப் பயிற்சியில் ஊழியர்களுக்குக் கோடிங் மற்றும் ப்ரோகிராமிங் பின் டிசைன், கிரியேடிவிட்டி மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைக் கூடுதலாகப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

19 வார பயிற்சி

19 வார பயிற்சி

இன்போசிஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்களை அதிகளவில் நிறுவனத்தில் சேர்த்து வருகிறது.

இனி இன்போசிஸில் சேரும் பட்டதாரிகளுக்கு 19 வார பயிற்சி அளிக்கப்டும். இதில் 9 வாரத்தில் மென்பொருள் துறையில் அடிப்படை மற்றும் 3 ப்ரோகிராமிங் லேங்வேஜ்களைக் கற்றுத்தரப் போகிறது. இதற்கு முன் ஒரேயொரு ப்ரோகிராமிங் லேங்வேஜ் மட்டும் கற்றுக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 10 வாரத்தில் அணியுடன் சேர்த்து எப்படித் திறம்பட வேலை செய்ய வேண்டும், கூடுதலாக டிசைன், கிரியேடிவிட்டி மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைப் பற்றிக் கற்பிக்கப்படும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

 

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

மேலும் இந்தப் பயற்சியில் தற்போது சந்தையில் இருக்கும் முன்னணி தொழில்நுட்பமான பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட், டிஜிட்டல் காமர்ஸ் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கவும் முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.

இதனுடன் அனைவருக்கும் சாப்ட் ஸ்கில்ஸ் அடிப்படையாகக் கற்றுத்தருகிறது இன்போசிஸ்.

 

புதிய ஊழியர்கள்

புதிய ஊழியர்கள்

இந்தப் புதிய பயிற்சி திட்டம் வெற்றிபெற்றால் இன்போசிஸ் நிறுவனத்தில் பிரஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதேபோல் கல்லூரிகளில் இருந்து நேரடியாகச் சேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இந்திய ஐடி நிறுவனங்களில் பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஆபத்து என்பது பொருள்.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறிய நிலையில், எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.

இந்த நிலையைக் காப்பாற்றிக்கொள்வே இந்தச் சிறப்புப் பயிற்சியை வடிவமைத்துள்ளது இன்போசிஸ்.

 

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

இன்போசிஸ் வாடிக்கையாளர்கள் யாரும் வெளியேறவில்லை என்றாலும் இந்நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்கள் மீதான போட்டி எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+