சுயதொழிலில் நிதி ஆதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான 5 வழிகள்

Written By:
Subscribe to GoodReturns Tamil

சுயதொழில் என்பது "தன் சொந்த முயற்சியில் தொடங்கப்படும் ஒரு தொழில் நிகழ்வு" என்ற அளவில் தான் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்நிகழ்வு சுயதொழில் என்னும் நெடும்பயணத்தில் 25 சதவீதமே ஆகும்.

பல்வேறு குழப்பங்களுக்கும், மனத்தடுமாற்றங்களுக்கும் இடையே தொழில் ஒன்றைத் தொடங்கும் முனைவோர், தாம் 25% பயணத்தை மட்டுமே கடந்திருக்கிறோம் என்பதை விரைவில் உணர்வர்.

நீங்கள் எடுத்த தொழிலில் நிலைபெறவும், வளர்ச்சி காணவும் விரும்பினால், உங்களது அணுகுமுறை, தேர்ந்தெடுத்த தொழிலின் மாதிரி உருவாக்கம் (மாடல்), தன் குழுவின் பலம், சந்தை நடப்பு குறித்த தெளிவு போன்றவற்றைச் சார்ந்த பல்வேறு விஷயங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், இவை யாவும் இரண்டாம் கட்டப் புறக்கூறுகளே ஆகும். தொழிலின் தரத்தை உயர்த்தி, தொழில் முயற்சியை வெற்றிகரமாக்கக்கூடிய, அதீத கவனம் தேவவைப்படும் முதல் கட்டக் கூறுகள் அனைத்தும் தொழில் முனைவோரைச் சார்ந்ததே.

சுயதொழில் முயற்சியை நிலைநிறுத்தி, அதனை முழு வீச்சில் வெற்றிகரமாக்கக்கூடிய ஐந்து வழிகள் இதோ உங்களுக்காக:

1. உங்கள் ஆற்றல் மற்றும் அளவுகோலை கணியுங்கள்:

நில அமைப்பு மற்றும் உங்கள் தொழிலின் மாதிரி உருவாக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள விளையுங்கள். மிக முக்கியமாக, உங்கள் தொழிலை நீங்கள் நினைக்கும் அளவுக்கு எடுத்துக் கொண்டு போகக்கூடிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு உள்ளதா என நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களின் நீடித்த ஆற்றலும், உங்கள் தொழிலின் மாதிரி உருவாக்கமும் தான் உங்கள் தொழில் மீது மற்றவர்க்கு திடநம்பிக்கையை ஏற்படுத்தவல்லவை.

2. உணர்வுப்பூர்வமான பிணைப்பு:

தொழில் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான பந்தம் உங்கள் தொழிலின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாகும். நீங்கள் எந்தளவுக்கு உங்கள் தொழிலுடன் உணர்வுப்பூர்வமாக பிணைந்திருக்கிறீர்களோ, அந்தளவுக்கு அளவற்ற ஆற்றலுடனும், ஈடுபாட்டுடனும் தெளிவாக உங்களால் செயலாற்ற முடியும். தொழில்முறை சவால்களை எதிர்கொள்வதற்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு அத்தியாவசியமனது.

3. ஒருமுக சிந்தனை:

உங்கள் தொழிலின் மாதிரி உருவாக்கத்தை முடிவு செய்த பின், தொழில் மீது ஒருமுகமான கவனம் கொள்ள வேண்டும். தொழில் மீது இத்தகைய ஒருமித்த கவனம் செலுத்துவதற்காக, உங்கள் வாழ்வின் இதர பல விஷயங்களில் நீங்கள் பலவிதமான உடன்பாடுகளை செய்து கொள்ள வேண்டியிருக்கும். மேலும், ப்ளான் பி என்று சொல்லக்கூடிய மாற்றுத்திட்டம் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாற்றுத்திட்டம் வைத்திருப்பது நல்லது என்று பலர் கூறினாலும், மாற்றுத்திட்டம் என்பது பெரும்பாலும் உங்கள் கவனத்தை சிதறடிக்கக்கூடியது என்பது தான் உண்மை.

4. நம்பத்தகுந்த வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்:

தொழில்முனைவோராய் இருப்பது சவாலானதாக மட்டுமின்றி பெரும்பாலும் தனித்தே செயல்பட வேண்டியதாகவும் இருக்கும். தனிமையாக உணரும்போது உங்களின் செயல்திறனையும் இழக்க நேரிடும். இதற்கான தீர்வு, உங்களுக்கென ஓர் "நம்பத்தகுந்த வட்டாரத்தை" உருவாக்கிக் கொள்வதே ஆகும். உங்களின் பிரச்சினைகளை இவர்களோடு பகிர்ந்து கொண்டு சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். குழப்பமான சமயங்களில் இவர்கள் உங்களை சரியான பாதையில் திருப்புவதோடு, பொருத்தமான முடிவுகளை எடுக்கவும் உதவுவர்.

5. நிதி தொடர்பான நிபுணத்துவம்:

உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, கவனம், அறிவாற்றல், நம்பிக்கை ஆகியவை நீங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் நிலைபெறவும், வளரவும் உங்களை தயார்படுத்தும் என்றாலும் நிதி தொடர்பான சிறந்த திட்டமிடலும், நிபுணத்துவமுமே அதனை செயல்படுத்தவும், அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் துணைபுரிபவை ஆகும். உங்களின் திட்டங்களை செயல்படுத்துவது என்பது, நிதிநிலையில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

அதிகாரத்தை கைக்கொள்ளல்:

தொழிலுடனான உணர்வுபூர்வமான பந்தம் உங்கள் ஆற்றலையும், ஈடுபாட்டையும் அதிகரித்து உங்கள் இலக்கை நோக்கி தெளிவாக செயலாற்ற வைக்கும்.

ப்ளான் பி என்று சொல்லப்படும் மாற்றுத்திட்டத்தை வைத்திருப்பது நல்லது என்று பலர் கூறினாலும், அத்தகைய மாற்றுத்திட்டம் உங்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும் என்பதே உண்மை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Five tips to secure finances in entrepreneurial journey

Five tips to secure finances in entrepreneurial journey
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns