உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவையினை அளித்து வரும் விஸ்தரா நிறுவனம் 2017-ம் ஆண்டின் தீபாவளி சலுகையாக 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ள இந்தத் தீபாவளி சலுகையில் 11/10/2017 முதல் 12/10/2017 வரை என 48 மணி நேரம் வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
பயணக் காலம்
சலுகை விலையில் விமான டிக்கெட்களை 2017 அக்டோபர் 26 முதல் 2018 மார்ச் 24 வரையிலான தேதிகளில் முன் கூட்டியே இந்த இரண்டு நாட்களில் புக் செய்து பயன்பெறலாம்.
சலுகைகள்
எக்கானமி வகுப்பு பயண டிக்கெட்களை 1,149 ரூபாய் முதலும் பிரீமியம் எக்கானமி டிக்கெட் கட்டணங்களில் 2,099 ரூபாய் முதலும் ஆஃபர்களை விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.
வழிதடங்கள்
விஸ்தரா நிறுவனம் எந்த வழித்தடங்களில் எல்லாம் தீபாவளி சலுகையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது என்ற முழுப் பட்டியலை இங்குக் காணலாம்.
| Sector (available in both directions) | All-in one way promotional Economy Class fares (in INR) | All-in one way promotional Premium Economy fares (in INR) |
|---|---|---|
| ஜம்மு-ஸ்ரீநகர் | 1,149 | 2,099 |
| தில்லி-சண்டிகர் | 1,199 | 2,599 |
| தில்லி-அமிர்தசரஸ் | 1,299 | 2,799 |
| தில்லி-லக்னோ | 1,349 | 2,649 |
| தில்லி-அகமதாபாத் | 1,499 | 3,499 |
| தில்லி-ஸ்ரீநகர் | 1,699 | 3,299 |
| தில்லி-வாரணாசி | 1,899 | 3,299 |
| தில்லி-ராஞ்சி | 2,099 | 3,599 |
| தில்லி-மும்பை | 2,099 | 4,099 |
| தில்லி-லாக் | 2,099 | 4,199 |
| தில்லி-புனே | 2,499 | 4,199 |
| தில்லி-ஹைதெராபாத் | 2,499 | 4,199 |
| தில்லி-புவனேஸ்வர் | 2,599 | 4,599 |
| தில்லி-கொல்கத்தா | 2,599 | 4,699 |
| புனே-கொல்கத்தா | 2,799 | 4,599 |
| தில்லி-பெங்களூரு | 2,899 | 5,199 |
| தில்லி-பாக்தோகிறா | 2,899 | 3,599 |
| மும்பை-அமிர்தசரஸ் | 2,999 | 4,699 |
| தில்லி-கோவா | 2,999 | 4,999 |
| தில்லி-குவஹாத்தி | 3,099 | 4,999 |
| கொல்கத்தா-போர்ட் பிளேர் | 3,199 | 5,199 |
| தில்லி-கொச்சி | 3,799 | 5,299 |
டிக்கெட் புக் செய்வது எப்படி?
விஸ்தரா நிறுவனம் airvistara.com என்ற இணையதளம் மூலமாகவும், ஐ ஓஎஸ் செயலி, ஆண்டிராய்டு செயலி, விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டர், டிக்கெட் ஏஜெண்ட்டுகள் மூலமாகவும் சலுகை விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
முன்னுரிமை
குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்கள் சலுகை விலையில் உள்ளதால் முதல் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications