தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்பது நேற்றை அமைச்சர்கள் கூட்டம் மூலம் நிறைவேறியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள 10 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
குறிப்பு: அரசாணை கட்டுரையின் கடைசியில் உள்ளது.
நிதித் துறை செயலாளரான கே சண்முகம் தலைமையிலான உயர் மட்ட குழு சமீபத்தில் தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிக்கையினைச் சமர்ப்பித்தது. இது குறித்த பரிசீலனை கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்று சம்பள உயர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
சம்பள உயர்வு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.
செலவு
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 14,719 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விரிவான சம்பள உயர்வு பட்டியல்
2017 செப்டம்பர் 27ம் தேதி 5 நபர்கள் கொண்ட சம்பள உயர்வுக்கான அமைப்பு தமிழக அரசிடம் அறிக்கையினைச் சமர்ப்பித்தது.
புதிய பே மேட்ரிக்ஸ், ஃபிட்மெண்ட் காரணி, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம்
பே பேண்டு மற்றும் கிரேடு பே: பே மேட்ரிக்ஸ் (32 நிலைகள்)
குறைந்தபட்ச சம்பளம்: ரூ. 15,700
அதிகபட்ச சம்பளம்: ரூ.2,25,000
ஃபிட்மெண்ட் காரணி: 2.57 (ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும்)
குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்: ரூ.7,850
அதிகபட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்: ரூ.1,12,500 முதல் ரூ.67,500 வரை
கிரேஜூவிட்டி: ரூ.20 லட்சம் வரை
ஆண்டுச் சம்பள உயர்வு: 3%
வீட்டு வாடகைப்படி: ரூ.250 முதல் 8,300 வரை
நகர ஊழியர்களுக்கான படி: இரட்டிப்பு
அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களைப்போன்றே கிடைக்கும்.
7வது சம்பள கமிஷன் அமைக்கப் போராட்டம்
கடந்த சில மாதங்களாக ஜேக்டோ ஜியோ போன்ற ஊழியர்கள் சங்க அமைப்புகள் 7 வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் இதற்கான வழக்கு உயர் நீதிமன்றம் வரை சென்று அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டங்களுக்குப் பெறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகை வெளியீடு
தமிழக அரசின் அறிவிப்பை இங்கு காணலாம். அரசானை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்போது முதல் சம்பள உயர்வு?
அக்டோபர் மாதம் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகவிலைப்படிக்கான அரசானை
அகவிலைப்படிக்கான அரசானை எண்.300. நாள் 10/10/2017
அரசாணை
தமிழக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது!
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications