டாடா குழுமத்தின் தலைமை நிர்வாக நிறுவனமான டாடா சன்ஸ்-இன் புதிய தலைவர் சந்திரசேகரன் அதிகளவிலான நஷ்டத்தில் இருக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வையர்லெஸ் வர்த்தகத்தை முழுமையாக விற்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஜியோவிடம் கடுமையாகப் போட்டிபோட்டு வரும் பார்தி ஏர்டெல் அதிக வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகச் சந்தையைப் பெறும் நோக்கில் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வையர்லெஸ் வர்த்தகத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
4 கோடி வாடிக்கையாளர்கள்
டாடா குழுமம் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் மத்தியிலான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறை ஒப்புதல்களுடன் பணமில்லா மற்றும் கடன் இல்லாமல் டாடா டெலிசர்வீசஸின் வையர்லெஸ் வர்த்தகத்தில் இருக்கும் 4 கோடி வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனத்திற்கு மாற்றுகிறது.
கடன்
இந்த ஒப்பந்தத்தில் டாடா டெலிசர்வீசஸ் ஸ்பெக்ட்ரத்திற்கு அளிக்க வேண்டிய 10,000 கோடி ரூபாய் கடனை மட்டுமே பார்தி ஏர்டெல் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு டாடா நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம்
டாடா டெலிசர்வீச்ஸ் நிறுவனம் டோகோமோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் டெலிகாம் சேவையை அளித்து வந்தது, இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான பிரச்சனையில் வர்த்தகத்தை விட்டு டோகோமோ வெளியேறியது.
தற்போது டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திடம் 800, 1800, 2100 மெகாஹெட்ஸ் அளவீட்டில் ஒவ்வொன்றிலும் சுமார் 180 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் கொண்டுள்ளது.
19 வட்டங்கள்
இந்த ஸ்பெக்ட்ரத்தை கொண்டு டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் சுமார் 19 வட்டங்களில் 2ஜி, 3ஜி, சில வட்டங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது.
பயன்படுத்த ஒப்புதல்
இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தத்தில், முதல் கட்டமாக 19 வட்டங்களிலும் தனது ஸ்பெக்ட்ரத்தையும், இதர சொத்துகளையும் பயன்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏர்டெல் தனது பைபர் ஆப்டிக் சேவையைக் கொண்டு இந்த 19 வட்டத்தில் சேவையை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் சேவையை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
மொத்த சேவை
டாடா மற்றும் பார்தி ஏர்டெல் குழுமங்கள் மத்தியிலான இந்த ஒப்பந்தம் டெலிகாம் சேவையுடன் நிற்காமல் கடல்கடந்த கேபிள், என்டர்பிரைசர்ஸ் சேவைகள் மற்றும் டிடிஎச் டிவி வர்த்தகம் வரையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி
ஏர்டெல் - டாடா இணைப்பின் மூலம் ஐடியா- வோடபோன் கூட்டணிக்கு வருவாயிலும் சரி, வர்த்தகத்திலும் சரி நேருக்குநேர் ஈடுகொடுக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
31,000 கோடி ரூபாய் கடன்
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் மீது தற்போது 31,000 கோடி ரூபாய் அளவிலான கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களின் நிலை
தீபாவளி ஆஃபர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications