நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான இன்டஸ்இண்ட் வங்கி செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் 25 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
சந்தையில் இருக்கும் பிற வங்கிகளை விட இவ்வங்கியில் வராக்கடன் அளவு சற்று குறைவாகவே உள்ளது.
லாபம்
கடந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டில் 704.26 கோடி ரூபாயாக இருந்து இவ்வங்கியின் லாபம் தற்போது 880.10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மொத்த வருமானம்
அதேபோல் இவ்வங்கியின் மொத்த வருமானத்தின் அளவு 4,439.72 கோடி ரூபாயில் இருந்து 5,395.92 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வராக் கடன்
இந்திய வங்கிகளில் பெரிய தலைவலியாக இருக்கும் வராக் கடன் இன்டஸ்இண்ட் வங்கியில் சற்று குறைவாகவே இருக்கிறது என்று கூறலாம். கடந்த வருடத்தில் மொத்த கடனில் 0.37 சதவீதமாக இருந்த வராக்கடன் தற்போது 0.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் இவ்வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளிவரும் காரணத்தால் காலை வர்த்தகம் துவங்கும் முதலே உயர்வான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாலை 3.10 மணியளவில் இன்டஸ்இண்ட் வங்கியின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 1.32 சதவீதம் வரை உயர்ந்து 1,739.90 ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications