இந்திய பங்குச்சந்தையில் அதிக மூலதனத்தைக் கொண்ட, நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில், சந்தை கணிப்புகளை விடவும் அதிகமான வருவாய் மற்றும் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் மீது வழக்கத்தை விடவும் கூடுதனால் முதலீட்டை பெற்று, அதிகளவிலான உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த வருவாய்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் 30,541 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, இதர வழிகளில் 819 கோடி ரூபாய் என மொத்தம் 31,360 கோடி ரூபாய் மொத்த வருமானமாக இக்காலாண்டில் பெற்றுள்ளது டிசிஎஸ்.
செலவினம்
ஜூன் காலாண்டு விடவும் செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான செலவினங்களைக் காட்டியுள்ளது டிசிஎஸ் நிறுவனம். இதன் மூலம் ஜூன் 30முடிவில் 22,670 கோடி ரூபாயாக இருந்த செலவினம் செப்டம்பர் காலாண்டில் 22,881 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
லாபம்
இந்நிலையில் வரிக்கு முந்தைய லாபமாக இக்காலாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் 8,472 கோடி ரூபாய் பெற்றுள்ளது, வரிக்குப் பின் 6,460 கோடி ரூபாய் என்ற அளவில் பெற்று முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.
லாபத்தில் வளர்ச்சி
ஜூன் காலாண்டின் முடிவில் 5,950 கோடி ரூபாயாக இருந்த லாபம், செப்டம்பர் காலாண்டில் 6,460 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 6,603 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈவுத்தொகை
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 7 ரூபாய் அளிக்க டிசிஎஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணம் நவம்பர் 1ஆம் தேதி முதலீட்டாளர்கள் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
டிஜிட்டல் வருவாய்
இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 19.7 சதவீதம் டிஜிட்டல் சேவையின் மூலம் கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 31 சதவீதம் அதிகமாகும்.
வாடிக்கையாளர்கள்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 1 வாடிக்கையாளரையும், 50, 20, 10 மில்லியன் டாலர் பிரிவில் 6 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
1 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 28 வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது டிசிஎஸ்.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
இந்நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த காலாண்டை விடவும் 0.3 சதவீதம் குறைந்து செப்டம்பர் காலாண்டில் 11.3 சதவீமாக உள்ளது.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
செப்டம்பர் காலாண்டின் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,89,213 ஆக உள்ளது. இக்காலாண்டில் மட்டும் புதிதாக 15,868 ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications