சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆப்லைன் வணிகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது மட்டும் இல்லாமல் பியூச்சர் குழுமத்தின் பிக் பஜார் உடன் கூட்டு சேர்ந்து மொபைல் போன் விற்பனை செய்ய உள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சியோமி நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளைக் கவனித்து வரும் மனு ஜெய்ன் சமுக வலைத்தளங்கள் மூலமாக அறிவித்துள்ளார்.
ஆப்லைன் வர்த்தகம் துவக்கம்
சியோமி நிறுவனம் ஒன்று தான் 2016-ம் ஆண்டு வரை இணையதளத்தில் மட்டுமே தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்று வந்தது. இதுவே சில மாதங்களுக்குப் பெங்களூருவில் தங்களது முதல் ஆப்லைன் கடையினைச் சில மாதங்களுக்கு முன் துவங்கி ஒரே நாளில் கோடி கணக்கில் வணிகம் செய்தும் அசத்தியது.
உலகில் முதன் முறையாக
எந்த ஒரு சூப்பர் மார்க்கெட் நிறுவனமும் இதுவரை மொபைல் போனை விற்பனை செய்ததில்லை என்று ஜெயின் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்?
சில மாதங்களுக்கு முன்பு கிஷோர் பியானி அவர்களைச் சந்தித்தபோது பியூச்சர் குழுமத்துடன் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவு செய்ததாகவும் அதன்படி பிக் பஜார் கடைகளில் போன் விற்கப்போகின்றோம் என்றும் கிஷோர் தெரிவித்தார்.
போன்கள் மற்றும் ஆஃபர்
எம்ஐ மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 இரண்டு போன் மாடல்களையும் பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்களில் சிறப்பு விலையில் வாங்கலாம் என்றும் பஜாஜ் பின்சர்வ் மூலமாகத் தவனை முறையில் வாங்கலாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தி வங்கும் போது கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி
நாடு முழுவதும் உள்ள 240 பிக் பஜார் சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் கிடைக்கும் ஆனால் தீபாவளிக்கு பிறகு கிடைக்குமா என்று தெரியவில்லை
இணையதளச் சேவை திட்டம்
மேலும் இந்தியாவில் இணையதளச் சேவை வழங்குனராக வணிகத்தினை விரிவுபடுத்தவும் சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 30 சதவீத வருவாயினை ஆப்லைன் மூலம் பெற வேண்டும் என்றும் திட்டம் தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வருவாய்
இந்தியாவில் சியோமி நிறுவனத்திற்கு 20 சதவீதம் வரையிலான வருவாய் ஆப்லைன் மூலமாகவும் மீதி 80 சதவீத வருவாய் இணையதளம் மூலமாகவும் வருகின்றது. இதனை இரட்டிப்பாகச் சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications