லக்னோ: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 20 சதவீதம் வரை போனஸ் அறிவித்துள்ள நிலையில் உத்திரபிரதேச முதல்வர் நேற்று தங்களது மாநில அரசு ஊழியர்களுக்குப் போனஸ் அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்து வருகின்றன.
ஒரு மாத சம்பளம்
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்ற பிறகு அரசு ஊழியர்களை எந்த 24 மணி நேரமும் பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும் கூறி இருந்தார். தற்போது தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 1 மாத ஊதியத்தினைப் போனஸ் ஆக அளிக்க உள்ளார்.
எவ்வளவு போனஸ் கிடைக்கும்?
உத்திரபிரதேச அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி அரசு ஊழியர்களுக்கு 6,908 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்றும் இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஊழியர்கள்
அரசு ஊழியர்களில் தினக் கூலிக்கு பணி செய்பவர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஊழியர்கள் என அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதற்காக உத்திரபிரதேச அரசுக்கு 967 கோடி ரூபாய் வரை செலவு ஆகுமாம்.


Click it and Unblock the Notifications