நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2018ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவில் சுமார் 1,01,169 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இது கடந்த நிதியாண்டை விடவும் 16 சதவீத அதிக வருமானமாகும்.
ஜியோ
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இக்காலாண்டில் 6,147 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளது. ஆயினும் இந்நிறுவனத்தின் மலிவுவிலை கட்டணத்தால் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 270 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
லாபம்
செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த காலாண்டை விடவும் அதிக வருமானத்தைப் பெற்றாலும் லாபத்தின் அளவு சற்று குறைவாகவே உள்ளது.
ஜூன் காலாண்டில் 9,079 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் காலாண்டில் 8,097 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் 7,179 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுத்திகரிப்பு
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இக்காலாண்டில் ஒரு பேரலுக்கு 12 டாலர் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 10.10 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 4.20 சதவீதம் வரை உயர்ந்து 876.70 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதிப்புகள்
சந்தையின் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவிற்குப் பெரிய லாபங்கள் இல்லாத நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெறும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications