மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துச் சுமார் 6 கோடி மக்களை ஆதார் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் சலுகைகள் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கும்பட்சத்தில் போலியாக நன்மை அடைவோர்களை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9 பில்லியன் டாலர் அதாவது 58,419 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என நந்தன் நீலகேனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் நந்தன் நீலகேனி தலைமையில் தான் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. 62 வயதாகும் நந்தன் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராவர்.
நந்தன் சமீபத்தில் உலக வங்கியின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குக் குறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசும் போதும் ஆதார் மூலம் 9 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.
அதுமட்டும் அல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஆதார் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்றும் நந்தன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications