ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் சில வங்கி யூனியன்களுடன் சேர்ந்து இந்த மாத இறுதியில் ஊழியர்களின் சம்பள உயர்வு கோரி 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
இவ்வங்கி ஊழியர்களுக்கு நவ.1, 2012 முதல் அக்டோபர் 31, 2017 வரையிலான காலத்திற்குச் சம்பள உயர்வு செய்யாமல் உள்ளது இதனை மைய கருத்தாக வைத்து ஐடிபிஐ வங்க ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் பிற அரசு வங்கிகளில் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடிபிஐ வங்கியில் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்தச் சம்பள உயர்வு நாளான நவ.1 2017 நெருங்கிவிட்டது என ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு வருகிற அக்டோபர் 24 -25ஆம் தேதிகளில் ஊழியர்களின் நிலுவை சம்பளத்தைக் கோரி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications